நெடுந்தீவை நோக்கிப் புறப்பட்டாள் நெடுந்தாரகை-விபரங்கள் படங்கள் இணைப்பு!

நெடுந்தீவை நோக்கிப் புறப்பட்டாள் நெடுந்தாரகை-விபரங்கள் படங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு தனது முதல் கடல் பயணத்தை 20.01.2017 வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது-  நெடுந்தாரகை கப்பல் …. 150Million ரூபாக்கள் பெறுமதியான- இக்கப்பலை வடக்கு மாகாண முதலமைச்சர் ஒழுங்குபடுத்தியுள்ளார்.

நெடுந்தாரகையின் முதல் பயண நிகழ்விற்காக ஆஸ்திரேலியத் தூதுவர் யாழ்ப்பாணம் வருகைதந்துள்ளார்.

உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலிய நாடுகளின் உதவியுடன் குறிகட்டுவான் நெடுந்தீவு இடையிலான பயணிகள் போக்குவரத்திற்காக 150 மில்லியனில் இலங்கை படகுகட்டுமான நிறுவனமான டொக்கியாட் நிறுவனத்தினில் 80 இருக்கைகள் வசதியுடன் அமைக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட படகிற்கான மாலுமிகளிற்காகவும் நெடுந்தீவு இளைஞர்களில் ஐவரிற்கு இலங்கை துறைமுக அதிகார சபையின் ஊடாக பயிற்சி வழங்கப்பட்டு தற்போது வருகை தந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்துள்ள நெடுந்தாரகைக்காக முதல் ஓர் ஆண்டிற்கான முழுமையான காப்புறுதி செலுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் காப்புறுதிப்பணம் 36 லட்சம் ரூபாவாகும்.

நெடுந்தாரகையின் முதல் பயணசேவையினை வட மாகாண ஆளுநர் , வட மாகாண முதலமைச்சர் , மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் , இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவர் மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஆகியோர் இணைந்து வெள்ளிகாலை ஆரம்பித்துவைத்தனர்

 இவ் விழாவில்உள்ளுராட்சி அமைச்சர் சைபர் முஸ்தபா, விஜயகலா மகேஷ்வரன் மற்றும் பல அரசியல் பிரமுகர்களும்  கலந்துகொண்டதுடன் பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டதாக தெரிய வருகின்றது.16129635_1836030873345302_1333949818_o 16130042_1836030860011970_111933860_o 16145139_1836030766678646_566553175_o 16145455_1836030783345311_1705499125_o 16145035_1836030813345308_1942445394_o 16144981_1836030760011980_1464998013_o 16196276_1836030743345315_1512693483_o 16196831_1836030746678648_325058368_o 16196634_1836030870011969_1484813247_o 16145137_1836030736678649_1847276473_o 16176311_1836085356673187_525057983_n 16129739_1836030833345306_114419796_o 16129709_1836030773345312_812525296_o

 

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux