அல்லையூர் இணையத்தினால்,வன்னியில் பெற்றோர்களை இழந்த 40 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு-தகவல் படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தினால்,வன்னியில் பெற்றோர்களை இழந்த 40 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு-தகவல் படங்கள் இணைப்பு!

15910225_1306956112699008_813108384_n

தைப்பொங்கலை முன்னிட்டு- அல்லையூர் இணையத்தினால்,வன்னியில் தாய் அல்லது தந்தையை,இழந்த தெரிவு செய்யப்பட்ட 40 மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஜெர்மனியில் வசித்த- அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர்கள்  திரு திருமதி சுப்பிரமணியம்-பூரணம் தம்பதிகளின் 15வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு-அன்னார்களது  குடும்பத்தினரால்,50 ஆயிரம் ஆயிரம் ரூபாக்கள் அல்லையூர் இணையத்தின் அறப்பணித்திட்டத்திற்கு வழங்கப்பட்டது.

இப்பணத்தினை கொண்டு- வன்னியில் மிகவும் பின்தங்கிய பகுதியான நெடுங்கேணியில் அமைந்துள்ள ஒலுமடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மற்றும் பட்டிக்குடியிருப்பு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை  என இரு பாடசாலைகளிலிருந்தும் தலா 20 மாணவ மாணவிகள் என மொத்தம் 40 பேர் தெரிவு செய்யப்பட்டு கடந்த 16.01.2017 திங்கட்கிழமை அன்று பட்டிக்குடியிருப்பு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் வைத்து இப்பகுதி கோட்டக்கல்வி அதிகாரி மற்றும் பாடசாலையின் அதிபர் மற்றும் அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தின் இரு அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு-மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

இங்கு தெரிவு செய்யப்பட்ட 40 மாணவ மாணவிகளுக்கும்- ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் ரூபாக்கள் வீதம் 40 ஆயிரமும்-இப்பாடசாலை மாணவர்களின் நிலையறிந்து நடத்தப்பட்ட பொங்கல் விழாவிற்கென-பாடசாலை அதிபரிடம்  5 ஆயிரம் ரூபாக்கள் வழங்கப்பட்டதுடன்-மேலும் இதர செலவுகள் என மொத்தம் 50 ஆயிரம் ரூபாக்கள் செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

உயர்ந்த நோக்கோடு -ஏழை மாணவர்களின் கல்விக்கு  50 ஆயிரம் ரூபாக்கள் தந்து உதவிய அமரர்கள்  திரு திருமதி சுப்பிரமணியம்-பூரணம் தம்பதிகளின் குடும்பத்தினருக்கு-இப்பாடசாலை மாணவர்கள் சார்பிலும்-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் சார்பிலும்-மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அமரர்கள்  திரு திருமதி சுப்பிரமணியம்-பூரணம் தம்பதிகளின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல அல்லைப்பிட்டி மூன்று முடி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.

image-0-02-06-d5a83e6199456ec5d22193074e08a0ff9c9a74e3ab2fced171d27e877ef87435-V image-0-02-06-264c4feb362d189c69b05efc48b29050e0394fe1750504c03e5da0e1e99ef768-V16117621_1410628848970256_203402918_n image-0-02-06-1d1003bbef3f4b7b1d52ce42aec04704b6950a6a2ebacf57fc8f463ad6740183-V image-0-02-06-73e684793663abafe879de73bcd38b608711b67198b42a3b5193f42946bed3c3-V image-0-02-06-4f3eb099367a57115bf7d0509be9944fb0bdae37f9e66ad64d961665f8e698cd-V image-0-02-06-006fbf38fe6dac98dc6709f73626138c47fcdbcd3c00b195a422bf759e3b7343-V image-0-02-06-0721e4f38333085979cd73ba9d88971efabf35857a523b6521e123b599040e23-V image-0-02-06-f49f9cfde4c8536993cf6acef79c2e625ed80605da3c315005dd8f9a5075ea98-V image-0-02-06-d8149c2e1aa49bb2c92200a8d586efe467de0afedc5f401f0368f1532d762448-V image-0-02-06-7b3b45deba25943f329e021f898b78f2572b2bfba2ffd52b8fd223ac2b432930-V image-0-02-06-9a8d0c4b331daea5300d9aff34d2c6c3da4529eb26e99cd685d57fe4ff9af78e-V image-0-02-06-9ace530158a2f34f031bdbf4c1434c52b8b41c06d08be6d2a093be2713bb1745-V image-0-02-06-6c1d67a92df5083060ab5b8eb70e5fccb757368ac4400f89158cb861e4b72c0f-V 16117473_1410630452303429_1813115229_n16144043_347152135677917_453245359_n 16117920_1410633115636496_323136400_n 16144144_1410631912303283_1177424748_n 16144432_1410633048969836_197161261_n 16144375_347150329011431_1312017672_n 16128194_1410633138969827_154699609_n 16128252_347150849011379_1289137732_n 16128841_1410633418969799_694865352_n 16128878_1410631412303333_986513710_n 16117260_347150335678097_459260667_n 16112015_347150229011441_1450111634_n 16117232_1410630642303410_382920240_n 16118053_1410628915636916_631590516_n 16117977_347149635678167_613922191_n 16118630_1410630415636766_409651283_n 16118554_1410632198969921_271104546_n 16128374_1410633118969829_636918895_n 16118547_1410632705636537_1951229107_n 16144258_1410633575636450_1988965383_n 16144029_1410633215636486_1065027478_n 16143996_347152332344564_1996711347_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux