அல்லையூர் இணையம், ஆதரவற்றவர்களை அரவணைத்து, நடத்திய தைப்பொங்கல் விழா-படங்கள்,விபரங்கள்,பற்றுசீட்டுக்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம், ஆதரவற்றவர்களை அரவணைத்து, நடத்திய தைப்பொங்கல் விழா-படங்கள்,விபரங்கள்,பற்றுசீட்டுக்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம் ஜந்தாவது ஆண்டாக- கிளிநொச்சியில் அமைந்துள்ள   மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் தங்கி கல்விபயிலும் ஆதரவற்ற 410 மாணவர்களின் நலன்கருதி,கருணையுள்ளம் கொண்ட-உங்கள் பேராதரவுடன் தைப்பொங்கல் விழாவினை ஏற்பாடு செய்து மிகச்சிறப்பாக 14.01.2017 சனிக்கிழமை அன்று நடத்தியிருந்தது.
இங்குள்ள ஆண்கள் பிரிவு-பெண்கள் பிரிவு மற்றும்சிறுவர் பிரிவு என,மூன்று பிரிவுகளில் பொங்கலிடப்பட்டதுடன்-அல்லையூர் இணையத்தின் சார்பில்-எமது அறப்பணியாளர் திரு இ. சிவநாதன் அவர்கள் தீவகத்திலிருந்து முதல் நாள் இரவு மகாதேவா ஆச்சிரமத்திற்குச் சென்று தங்கி நின்று பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்.

இம்முறை அல்லையூர் இணையத்தின் நேரடி நிதி அனுசரணையில் மூன்று இடங்களிலும்-வேலணை மக்கள் ஒன்றியம் கனடாவின் நிதி அனுசரணையில் ஒரு இடத்திலும் என மொத்தம் நான்கு இடங்களில் பொங்கல் சிறப்பாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

01-கிளிநொச்சி  மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம்

02-யாழ் மாவட்ட விழிப்புலன் இழந்தோர் சங்கம்

03-கிளிநொச்சி விஷேட தேவைக்குட்பட்டோர் இல்லம்

04-முல்லைதீவு நெடுங்கேணி  அரசினர் தமிழ்க் கலவன் வித்தியாலயம் – ஆகிய நான்கு இடங்களிலேயே பொங்கல் விழா சிறப்பாக நடத்தப்பட்டது.

மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்திற்கும்-யாழ் விழிப்புலன் இழந்தோர் சங்கத்திற்குமான இரு பொங்கல் விழாவிற்கும்  என அல்லையூர் இணையம் நேரடியாக நிதி திரட்டி வழங்கியிருந்தது.

கருணையோடு நிதி வழங்கியவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு…

01-அமரர்கள் திரு,திருமதி இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதியினர் சார்பாக வழங்கப்பட்ட நிதி(மண்டைதீவு-அல்லைப்பிட்டி-பிரான்ஸ்)

02-திரு  ஏரம்பு வேலும் மயிலும்(மண்கும்பான் -பிரான்ஸ்)

03-திரு சோ. ராதா சேதுபதி (அல்லைப்பிட்டி-லண்டன்)

04-திரு நடராஜா சிறிதரன் (மண்கும்பான்-பிரான்ஸ்)

05-திரு,திருமதி  நகுலன்-சுகிர்தராணி  (அல்லைப்பிட்டி-சுவிஸ்)

06-திரு,திருமதி ரவி-பத்துமாவதி  (அல்லைப்பிட்டி-சுவிஸ்)

திரு செல்லையா சிவா  (அல்லைப்பிட்டி-பிரான்ஸ்) ஆகியோர் நிதி வழங்கியிருந்தனர்.

மொத்தம் 86 ஆயிரத்து 250 ரூபாக்கள்  திரட்டப்பட்டது.

மகாதேவா சுவாமிகள் இல்லத்திற்கு செலவுகள் உட்பட 55 ஆயிரம் ரூபாக்களும்

யாழ் மாவட்ட விழிப்புலன் இழந்தோர் சங்கத்திற்கு செலவுகள் உட்பட 23 ஆயிரம்  ரூபாக்களும் வழங்கப்பட்டது. மிகுதி 8ஆயிரத்து  250 ரூபாக்களும் அல்லையூர் இணையத்தின் அடுத்த கட்ட அறப்பணிக்கு பயன்படுத்தப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.

கருணையோடு எம்மீது நம்பிக்கை வைத்து நிதி வழங்கிய  அனைவருக்கும்-மகாதேவா ஆச்சிரமத்து மாணவர்கள் சார்பிலும்- யாழ் மாவட்ட விழிப்புலன் இழந்தோர் சங்கத்தினரின் சார்பிலும்-  அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் சார்பிலும்-இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

s (1) s (2) s (3) s (3) s (4) s (5) s (6) (1) s (7) s (8) s (9) s (10) s (11) s (12) s (13) (2) s (15) s (16) s (17) s (18) s (19) s (20) s (21) s (22) (1) s (23) s (24) s (25) s (26) s (27) s (28) s (29) s (30) s (31) s (32) s (32) s (33) s (34) dd (2) dd (3) dd (4) dd (5)16111894_1352001048207487_1863644706_n 15978715_1352002114874047_659309288_n dd (6) dd (7) dd (8) dd (10) dd (9) dd (10) dd (10) dd (11) dd (12) dd (13) dd (14)image-0-02-06-29df5bef4f0199a767d1eab6736b5519bf47f8d706250f12efee32420c1fe7b2-V image-0-02-06-941f758a4f07f1ae730b2070380a8178c487fb311f06346c6305263ca194f659-V image-0-02-06-6a147eee6b87f191a3179a663955595247a0689a59cad89dd751ab84caf6211b-V image-0-02-06-9ce3be5fa4eb62e4f2ab96a6d2486ba0521c0465d5fc36f83cb13567ba9a5809-V image-0-02-06-4485e9a8485c4ac49e9a631724f18429daae2eea72e3d8588600741a1147afb7-V image-0-02-06-6def57e4f99cf37e672c9f14992ee1c75463c4f87212e26b5e00b2ce732289f7-V image-0-02-06-99b67e407e00ad59dcae4be8b05bdeed9916082bb9d33b9f8e6a6f22816bcc0f-V image-0-02-06-561088d02401327cf8cbdd6144194f14d0ed22239201b90a8fc4d5a37d29a062-V image-0-02-06-8f502b908e318d4fa4236b7e1a42d636bd4f8e3a08cef3b977859df987229e34-V image-0-02-06-ce6e5f898d5774059f1bbb3db052ce12a166594dadf3b03133d618486b2a7902-V image-0-02-06-ec2e3c60b06e4f9591c366eeec2b269614968440ffcad95a54be1f915ac5796b-V image-0-02-06-c15cd18df11bb3f85903720633e4dc2299f5af4cc2c25afc436b55a730c4bac6-V image-0-02-06-7e0cd31ea715693620ef79b10b1e1774529b66efafc5b0703e54bebe036a79db-V image-0-02-06-b73d331084f9caa0d0e056fe199df9aeea108dc83ca1dd5adf6cdce3cce12885-V image-0-02-06-3077622c547fb791bf209efb204c738670fb5bd0ec233634e76b508ed750f153-V

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux