அல்லைப்பிட்டியில்  நடைபெற்ற அமரர் பொன்னுத்துரை ஜெயரட்ணம் அவர்களின் ஆத்ம சாந்தி திருப்பலி பூஜையின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற அமரர் பொன்னுத்துரை ஜெயரட்ணம் அவர்களின் ஆத்ம சாந்தி திருப்பலி பூஜையின் நிழற்படத் தொகுப்பு!

பிரான்ஸ் பரிஸில் கடந்த 13.12.2016 அன்று காலமான-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பொன்னத்துரை ஜெயரட்ணம் அவர்களின் 31ம் நாள் ஆத்ம சாந்தி விஷேட திருப்பலிப்பூஜை  12.01.2017 வியாழக்கிழமை மாலை அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

அல்லைப்பிட்டி பங்குத் தந்தையினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன்-அதனைத் தொடர்ந்து சிற்றுண்டி உபசாரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம் பெயர் மண்ணில் நோயினால் மூளைச்சாவடைந்த,ஜெயரட்ணம் அவர்களின் உடல் உறுப்புக்கள் அவரின் குடும்பத்தாரின் அனுமதியுடன்  ஆறு பேருக்கு பொருத்தி உயிர் வாழ்வு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

எமது அல்லைப்பிட்டிக் கிராமத்தில் பிறந்து வளர்ந்து-அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்திலும் பின்னர் வேலணை மத்திய கல்லூரியிலும் சிறப்பாக கல்விபயின்று பின்னர் பிரான்ஸ் நாட்டிற்கு  இடம்பெயர்ந்து-அங்கு நீண்டகாலம் வசித்து வந்த நிலையில்-திடீர் என நோயினால் பாதிக்கப்பட்டு உயிர் பிரிந்த நிலையிலும்-தனது உடல் உறுப்புக்களை தானமாக வழங்கி-எமது கிராமத்திற்கு மேலும்பெருமை சேர்ந்த, அமரர் பொன்னத்துரை ஜெயரட்ணம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய-அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையம் சார்பிலும் ஆண்டவரை வேண்டி நிற்கின்றோம்.

image-0-02-06-d09be8ea3a9f85792003a6e62348af05e568660607a3a796bdc4b8920345c7d1-v vcbgnhg image-0-02-06-4eeb185814643a1b03072b7ba9bef35876e4924b5b78b3af7b17938aef7a6bc0-v

aa (1) aa (2) aa (3) aa (4) aa (6) aa (34) aa (7) aa (8) aa (9) aa (10) aa (11) aa (13) aa (14) aa (15) aa (16) aa (18) aa (19) (1) aa (20) (1) aa (21) aa (22) aa (23) (1) aa (24) aa (25) aa (26) aa (27) aa (28) aa (29) aa (31) aa (32) aa (33) aa (37) aa (36) aa (38) aa (39) aa (41) aa (42) aa (43)aa (44)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux