யாழ்  பண்ணைப் பகுதியில் அமைந்திருந்த, தொலைத் தொடர்புக் கோபுரம் திடீரென சரிந்து வீழ்ந்தது-படங்கள் இணைப்பு!

யாழ் பண்ணைப் பகுதியில் அமைந்திருந்த, தொலைத் தொடர்புக் கோபுரம் திடீரென சரிந்து வீழ்ந்தது-படங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள ரெலிக்கொம் கோபுரம் சற்று முன் சரிந்து விழுந்தது.
இச்சம்பவம் இன்றுமாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தெய்வாதீனமாக உயிர்ச்சேதம்எதுவும் ஏற்படவில்லை. இந்த நேரம் வீதியால் சென்ற பெண் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது எனத் தெரியவருகிறது. 
கடந்த ஒருவாரமாக இந்த கோபுரத்தில்   திருத்தவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில்,இன்றைய தினமும் திருத்த வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. மதிய  உணவுக்காக திருத்தவேலைகள் மேற்கொண்ட நபர்கள் சென்றபின்னர் குறித்த கோபுரம் சரிந்து விழுந்துள்ளது. 
இதனால் ரெலிக்கொம் நிறுவனத்துக்கு முன்னால் இருந்த கால்நடை வைத்தியசாலையின் கட்டடங்கள்,மின்கம்பங்கள் சேதமடை ந்துள்ளன. அத்துடன் இந்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.வீதியின் குறுக்காக விழுந்து கிடக்கும் கோபுரத்தின் பகுதி களை அகற்றும் பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
15697292_1349382795126455_4974583205986013397_n 15740867_1349382521793149_1391998568479089988_n 15621829_1349382858459782_4012970623730406483_n15713179_825589094246841_1887413301_n 15713007_825589017580182_280902690_n 15726276_1209654172456284_8227456586727590794_n 15665494_1209654152456286_3332804383863594643_n 15672811_1209654185789616_2928493737423963058_n-1 15672811_1209654185789616_2928493737423963058_n 15697553_1349382828459785_5553346154198533367_n 15726369_1349382401793161_3346671943657208465_n 15726741_1349382478459820_1242088349243664700_n 15726931_1349382811793120_5674443725896658895_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux