கச்சதீவு புதிய புனித  அந்தோனியார் ஆலயம் யாழ் ஆயரினால் இன்று  திறந்து வைப்பு-படங்கள் இணைப்பு!

கச்சதீவு புதிய புனித அந்தோனியார் ஆலயம் யாழ் ஆயரினால் இன்று திறந்து வைப்பு-படங்கள் இணைப்பு!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம்  யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகராச ஆண்டகையினால் இன்று 23.12.2016 வெள்ளிக்கிழமை  திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகராசம் ஆண்டகை அவர்களின் தலைமையில் காலை 8.30 க்கு விசேட கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆலய திறப்பு விழா இடம்பெற்றுள்ளது.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில் புதிய ஆலயம் ஸ்ரீலங்கா கடற்படையினரின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு அதன் நிர்மாண பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி புதிய ஆலய திறப்பு விழா இடம்பெறவிருந்தது.
எனினும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் திகதி உயிரிழந்ததை தொடர்ந்து ஆலய திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது.
இந் நிலையிலேயே இன்று யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாரின் தலைமையில் கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புதிய ஆலயம் ஆசீர்வதிக்கப்பட்டு  திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஆலய திறப்பு விழாவில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், அருத்தந்தையர்கள், அருட்சகோதரிகள், கடற்படையினர் பொது மக்கள், பங்கு கொண்டதுடன்- அவர்களுக்கான விசேட படகு சேவையை கடற்படையினர் மேற்கொண்டமை  குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, இரோமேஸ்வரத்திலிருந்து 82 மீனவர்கள் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திறப்பு விழாவில் பங்கேற்றதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1482477832_download-2

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux