மண்கும்பானைச் சேர்ந்தவர்கள் வாள்வெட்டில்
                         படுகாயம்
                   ***********************

இனந்தெரியாதோர் வீடு புகுந்து மேற்கொண்ட வாள் வெட்டில் கணவன் மனைவி உட்பட மூவர் படுகாயமடைந்தனர். இச் சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில்யாழ் பொற்பதி வீதி கொக்குவிலில் இடம்பெற்றுள்ளது.

இத் தாக்குதல் சம்பவத்தில் அதேயிடத்தில் வசித்து வரும் மண்கும்பானைச் சேர்ந்த ப.சாந்தலிங்கம் (வயது 60) அவரது மனைவி சா. தங்கநாயகி மற்றும் தியாகராஜா (வயது 44) ஆகிய மூவருமே படுகாயமடைந்தவர்கள் ஆவர். வாகனம் ஒன்றில் வந்த சிலரே இத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எமது கிராமத்தை சேர்ந்தவர்களின் மரண 
                  அறிவித்தல்கள்
             **************************
மண்கும்பானை சேர்ந்த திரு செல்லத்துரை சுதாகரன்(சுதா)அவர்கள்
28/06/2010 அன்று பிரான்ஸில் காலமானார்.


அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச்சேர்ந்த திரு தருமலிங்கம்
செந்தில்வேல்(குணம்)அவர்கள்13/05/2010 அன்று பிரான்ஸில் காலமானார்.


அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் மண்கும்பானை வாழ்விடமாகவும் கொண்ட திரு பொன்னத்துரை சிங்கராஜா அவர்கள்
24/06/2010 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.


மண்டைதீவு 4ம் வட்டாரத்தை சேர்ந்த செல்வி கனகரட்ணம் பத்மினிமாலா
அவர்கள்26/06/2010அன்று மண்டைதீவில் அகாலமரணமானார்.


அல்லைப்பிட்டி 3ம்வட்டாரத்தைச்சேர்ந்த திரு சிதம்பரப்பிள்ளை குழந்தைவேலு அவர்கள்30/05/2010 அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்.


அல்லைப்பிட்டி 2ம்வட்டாரத்தைச்சேர்ந்த திரு அந்தோணி இராசலிங்கம்
அவர்கள் 17/06/2010 அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்.


அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தைச்சேர்ந்த திருமதி மடுத்தீன் ஆரோக்கியம்
அவர்கள் அல்லைப்பிட்டியில் காலமானார்.Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux