ஆதரவற்ற மாணவியின் கல்விக்கு மாதாந்தஉதவி வழங்க முன் வந்த வேலணையைச் சேர்ந்த கருணை உள்ளம்-விபரங்கள் இணைப்பு!

ஆதரவற்ற மாணவியின் கல்விக்கு மாதாந்தஉதவி வழங்க முன் வந்த வேலணையைச் சேர்ந்த கருணை உள்ளம்-விபரங்கள் இணைப்பு!

15086235_1256707167736876_961388943_n

வன்னியில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற-கொடிய யுத்தத்தின் போது தந்தையை இழந்து-தற்போது தாயார் திருமதி கௌசலா அவர்களுடன் – யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் அமைந்துள்ள  புனித யோசைப் முதியோர் இல்லத்தில் வசித்து வரும்  செல்வி சேதா  என்ற பெயருடைய- யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் ஆரம்ப பாடசாலையில் தரம்  4 இல் கல்வி கற்று  வரும்  மாணவியின் நலன் கருதியும் – குடும்ப நிலையினை  கருத்தில் கொண்டும்- எமது அல்லையூர்.இணையத்தின் அறப்பணிக் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கமைய -இம்மாணவியின் கல்வி வளர்ச்சிக்காகவென மாதாமாதம்  5000.00 ரூபாக்கள் வழங்குவதற்கு முன் வந்திருக்கின்றார்- கனடாவில் வசித்து வரும்-வேலணையைச் சேர்ந்த கருணை உள்ளம் படைத்த ஒரு நண்பர்.

இந்நண்பரினால் முதல் நான்கு மாதத்திற்காக  அனுப்பிவைக்கப்பட்ட  20000.00 ரூபாக்கள் -இம்மாணவியின் தாயாரது வங்கி கணக்கில்  இன்று வைப்பிலிடப்பட்டுள்ளது .

அல்லையூர்.இணையத்தின் அறப்பணிக்குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில். இவ்வுதவியை செய்ய முன்வந்த இக்கொடைவள்ளலுக்கு எமது இணையத்தின் அறப்பணி குடும்பம் சார்பாக இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

15049809_1256707074403552_1095574005_n 15101971_1256707224403537_1457972246_o

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux