யாழ் நகருக்கு அண்மையாகவும்-தீவகத்தின் தலைத்தீவாகவும் விளங்கும்-மண்டைதீவு கிராமத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முதற்தடவையாக டயலொக் நிறுவனம் தனது சேவையை,விஸ்தரிக்கும் நோக்கோடு புனித பேதுருவானவர் ஆலயத்திற்கு அருகில் தொலை தொடர்பு கோபுரம் ஒன்றினை நிறுவி தனது சேவையினை ஆரம்பித்ததாக தெரிய வருகின்றது.
டயலொக்கின் சேவையினை ஒருகிழமை வரை தெளிவாகப் பெற்று மக்கள் மகிழ்ந்திருந்த,நிலையில் மறுபடியும் சேவை செயலிழந்து பழைய நிலைக்குச் சென்று விட்டதாக-மண்டைதீவிலிருந்து நண்பர் ஒருவர் எமது இணையத்திற்கு தெரிவித்தார்.
இதுவரை எந்த அரசியல் கட்சிகளோ அல்லது -அரச அதிகாரிகளோ-மண்டைதீவுக்கு மக்களுக்குத் தேவையான தடையற்ற தொலைபேசி சேவையினை வழங்க முன்வரவில்லை என்று மக்கள் குறைபட்டுக் கொள்கின்றனர்.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அக்கறை எடுப்பார்களா?