யாழ் தீவக பிரதான வீதியில்,அல்லைப்பிட்டி பழைய அலுமினியம் தொழிற்சாலைக்கு அருகில்-பேருந்து தரிப்பிடம் ஒன்று லட்ச ரூபாக்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
அல்லைப்பிட்டி கிழக்குப்பகுதியைச் சேர்ந்த,அமரர்கள் திரு திருமதி கிஸ்ணபிள்ளை-கனகம்மா மற்றும் அமரர்கள் திருமதி பூங்காவனம் குணரத்தினம் மற்றும் கிஸ்ணபிள்ளை செல்வராசா ஆகியோரின் ஞாபகார்த்தமாக-சுவிஸில் வசிக்கும்-அமரர் கிஸ்ணபிள்ளை அவர்களின் புதல்விகள் திரு திருமதி நகுலன்-சுகிர்தராணி -திரு திருமதி ரவி-பத்மாவதி ஆகியோரினால்-இந்த பஸ் தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.
நீண்ட நேரம் பஸ்சுக்காக- கடும் வெய்யிலிலும் மழையிலும் வெட்டவெளியில் காத்து நின்ற மக்களுக்கு -இந்த நிழலகம் பெரும் ஆறுதல் தரும் என நம்புகின்றோம்.