கனடாவில் வசிக்கும்-புங்குடுதீவு,மண்டைதீவைச் சேர்ந்த,திரு திருமதி தனிநாயகம்-சியாலினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆரூஷன் தனது 10 வது பிறந்த நாளினை-03.11.2016 வியாழக்கிழமை அன்று கனடாவில் சிறப்பாக கொண்டாடுகின்றார்.
செல்வன் ஆரூஷன் படிப்பிலும்,விளையாட்டிலும் சிறந்து விளங்கிட-ஆண்டவன் என்றும் துணை புரிய வேண்டி வாழ்த்துகின்றோம்.
மண்டைதீவு-அல்லைப்பிட்டி மக்களால் நன்கு அறியப்பட்டவரும்-மண்டைதீவு முத்துமாரி அம்மன் ஆலய முன்னாள் தலைவரும்-சமூக ஆர்வலருமாகிய,அமரர் சின்னத்தம்பு வைரவநாதன் அவர்களின் அன்புப் பேரனே-செல்வன் ஆரூஷன் ஆவார்.
செல்வன் ஆரூஷனின் 10வது பிறந்த நாளினை முன்னிட்டு-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்திலும்,யாழ் கொழும்புத்துறையில் அமைந்துள்ள புனித சூசையப்பர் முதியோர் இல்லத்திலும் 03.11.2016 அன்று மதிய சிறப்புணவு வழங்கப்பட்டன-என்பதனை நன்றியோடு அறியத்தருகின்றோம்.
படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன..