கின்னஸ் புத்தகத்தில் தமிழ்ப் படம்

கனடிய தமிழர் சுரேஷ் ஜோக்கிம்12 நாட்களில் தயாரித்து, நடித்த சிவப்பு மழை என்ற திரைப்படம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
கின்னஸ் புத்தக நிறுவனத்திடமிருந்து இதற்கான சான்றிதழ் சமீபத்தில் சிவப்பு மழை குழுவினருக்கு அனுப்பப்பட்டது. அதை முதல்வர் கருணாநிதியிடம் காட்டி வாழ்த்துப் பெற்றுள்ளது சிவப்பு மழை படக்குழு.
சுரேஷ் ஜோக்கிம், மீரா ஜாஸ்மின், இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, மக்கள் தொடர்பாளர் நெல்லை சுந்தர்ராஜன் உள்ளிட்டோரை முதல்வர் வாழ்த்தினார்.
இந்தப் படத்தில் மீரா ஜாஸ்மின் நாயகியாக நடித்திருக்கிறார். தேவா இசையமைத்துள்ளார்.
1990ம் ஆண்டு பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று 13 நாள்களில் ஒரு படத்தை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது.
ஆனால் சிவப்பு மழை படம் 12 நாட்களிலேயே அனைத்துப் பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இதன் மூலம் இந்தப் படம் பழைய சாதனையை முறியடித்துள்ளது.
ஈழப் போராட்டப் பின்னணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனாலேயே சென்சார் சான்றிதழ் பெறுவதில் பல போராட்டங்களையும் சந்தித்தது சிவப்பு மழை.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux