யாழ் தீவகம் வேலணை கிழக்கைச் சேர்ந்த,திரு சபாரத்தினம் ராசகுமார் அவர்களின் புதல்வன் விகாஷ் 19.10.2016 புதன்கிழமை காலை தனது பாடசாலை தோழர்களுடன் அருகிலிருக்கும் பாடசாலைக்குச் செல்வதற்காக வீதியைக் கடக்க முற்பட்ட வேளை -வேகமாக வந்த பாரவூர்த்தி மோதியதால் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அவருடன் கூடச் சென்ற மாணவர்கள் சிலரும் காயமடைந்திருப்பதாக மேலும் தெரிய வருகின்றது.இச்சம்பவம் பரிஸ் 13 இல் அமைந்துள்ள boulevard massena என்னும் பெயர் கொண்ட பிரபலமான வீதியிலேயே இடம்பெற்றுள்ளதாக மேலும் கூறப்படுகின்றது.
