அல்லைப்பிட்டியில் 90 வயதைக் கடந்த பெரியவரின் சமூகப்பணி-விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் 90 வயதைக் கடந்த பெரியவரின் சமூகப்பணி-விபரங்கள் படங்கள் இணைப்பு!

12952998_1041924399215155_121295237_o

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பெரியவர் அல்பிரட் யோர்ச் அவர்கள்-90 வயதினைக் கடந்த நிலையிலும்-சைக்கிளில் தேனியாய் சுற்றி  சமூகப் பணிகளில் ஈடுபட்டு  வருவதனை இவ்வூர் மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

புலம் பெயர் நாடுகளிலிருந்து,  ஊருக்கு யாராவது வந்தால்,முதல் ஆளாகச் சென்று நலம் விசாரிப்பதுடன் -அவர்களிடமிருந்து  புனித கார்மேல் அன்னை ஆலய  புனரமைப்புப் பணிகளுக்கென்று  நிதி உதவியும் பெற்று வருகின்றார்.

தனது காலத்திலேயே-இவ்வாலயத்தினை சிறப்பாக புனரமைத்து விட வேண்டும் என்பதே-அவரது முதல் விருப்பமாக இருக்கின்றது.அத்தோடு அருகில் அமைந்துள்ள சேமக்காலைக்கான சுற்று மதிலினை அமைத்து விட வேண்டும்-என்ற அவரது இரண்டாவது விரும்பத்தினை நிறைவேற்றிட  ஊர் மக்களிடம் கொப்பியும்,கையுமாக அலைந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றார்.

அல்லைப்பிட்டியில் நடக்கின்ற பொது நிகழ்வுகள் அனைத்திலும் சென்று கலந்து கொள்வதோடு-அறிவுரைகளையும் எடுத்துச் சொல்லி வருகின்றார்.

உங்கள் சிறந்த ஆரோக்கியத்திற்கான காரணம் என்ன? என்று நாம் கேட்ட போது..கடுமையான உழைப்பும்-பழமையான சத்தான உணவுப் பழக்க முறையுமே காரணம் என்று  கூறினார்.

பெரியவர் அல்பிரட் யோர்ச் அவர்கள் என்றுமே சிறந்த  ஆரோக்கியத்துடன் நூற்றாண்டுகளை கடந்து வாழ-அல்லைப்பிட்டி புனித கார் மேல் அன்னை துணை நிற்க வேண்டும் என்று நாமும் வேண்டுகின்றோம். 

13902596_1356142717747500_2736338692858489223_n 10383574_922407311121045_7834105138044880390_n 10473330_909603365734773_9074514347259971898_o 14040104_1356146727747099_8043450189078443839_n 14095818_1356146507747121_5482278736174612870_n 14102367_1356146971080408_2875136419070969316_n 261460_243502232344893_1161774_n image-0-02-01-bd0b305b7ea5c72396e79663f4126bd912b006422c2d1cb78e39348e50f6f196-v-768x576 img_0103-copy sd-18 ss-7 img_0095-copy img_0100-copy

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux