எமது ஊருக்கு உதவுவோம் வாருங்கள்!!!

அல்லை வாகீசர் சனசமூக நிலையத்தின் தற்போதய தோற்ற

அல்லைப்பிட்டி கிழக்கு வாகீசர் சனசமூக நிலையத்தின் நிர்வாக பொதுக்குழு
கூட்டம் பலவருடங்களுக்குப் பின் 19/08/2010 -வியாழக்கிழமை அன்று கூட்டப்பட்டது.
வேலணை பிரதேசசபை உறுப்பினர்கள்,இருவா் முன்னிலையில்
பொதுக்குழு நிர்வாகம் தேர்வுசெய்யப்பட்டது.பெரும்பாலான பொதுமக்கள்
ஒன்று கூடியிருந்த நிலையில் தலைவர்,செயலாளர்,பொருளாளர்,ஆகிய
பதவிகளுக்கு முறையே-திரு.சங்கரப்பிள்ளை ரவீந்திரன்(தலைவர்)இலச்சுமி
காந்தன்-குணேஸ்வரன்(செயலாளர்)திரு .வேலுப்பிள்ளை பேரின்பநாயகம்
பொருளாளர்)உதவித்தலைவர் திரு நல்லையா மகேஸ்வரன் உதவி செயலாளர்
திருமதி விஜயகாந்தன் சுபஸ்திகா மற்றும் நிர்வாக உறுப்பினர்களாக முறையே
சோமசுந்தரம் மகேஸ்வரன்-மன்மதராசா சசிகுமார்-மகாலிங்கம் தனேசன்
இராசலிங்கம் கலியுகதாசன்-இராசலிங்கம் கமலதாசன் ஆகியோரும் விசேட
ஆலோசகராக திரு.தி-பற்பநாதன் அவர்களும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர். தொடர்ந்து வாகீசர் சனசமூக நிலையத்திற்கு
வெளிநாடுகளில் வாழும் இப்பகுதி மக்களிடம் இருந்து உதவிகளைப் பெற்றுத்
தருவதாக அல்லையூர் இணையமும் உறுதியளித்திருக்கின்றது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux