அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய,மாணவர்களின் நன்மை கருதி-சைக்கிள் தரிப்பிடம் ஒன்று- அமைக்கப்பட்டுள்ளதுடன்-வித்தியாலயத்தின் பின் பக்கமாக 50அடி நீளமான மதிலுடன் இணைத்தே இந்த சைக்கிள் தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வித்தியாலயத்திற்கான வெளி வாயில் வளைவு அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு-வேகமாக நடைபெற்று வருகின்றது.
அத்தோடு பாடசாலை வளவுக்குள் சரஸ்வதி சிலை ஒன்று அமைப்பதற்கான முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதுடன்-வித்தியாலயத்தின் மேற்தளத்தில் இயங்கும் நூலகத்திற்குத் தேவையான நூல்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான முன் ஏற்பாடுகளை,அல்லையூர் இணையம் மேற் கொண்டுள்ளது.
மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.