இலங்கையில் விசா நடைமுறையில் அடுத்த மாதம் முதல் மாற்றம்

இலங்கையில் விசா வழங்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இலங்கைக்கு வந்து இறங்கிய பிற்பாடு விசாக்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி பொதுவாக இருக்காது.
ஆயினும் சிங்கப்பூர், மாலைதீவுப் பிரஜைகளுக்கு மாத்திரம் விதி விலக்கு. இதன்படி எதிர்வரும் செப்ரெம்பர் மாதம்  30 ஆம் திகதியுடன் ஒன் எரைவல் விசாக்கள் ரத்து செய்யப்படடுகின்றன.
இப்புதியத் திட்டத்தின் அடிப்படையில் 70 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வர அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு சென்று விசா விண்ணப்பிக்க கோரிக்கைகளை முன்வைக்க வேண்டுமென குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி டபிள்யூ.ஏ.சீ பெரேரா தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கைப் பிரஜைகளுக்கு ஒன் எரைவல் விசா வழங்கும் நாடுகளினது பிரஜைகளுக்கு இலங்கை ஒன் எரைவல் விசா வழங்கத் தயார் என அறிவித்துள்ளது.
சிங்கப்பூர் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளைத் தவிர்ந்த வேறு நாடுகளில் இலங்கைப் பிரஜைகளுக்கு ஒன் எரைவல் விசா வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux