யாழ்/அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் நீண்டகாலமாக ஆசிரியையாகப் பணிபுரிந்து இளைப்பாறிய,எமது அன்புக்கும்-பெருமதிப்புக்குரிய -திருமதி கனகம்மா ஆலாலசுந்தரேசன் (ஆலு ரீச்சர்) அவர்கள் 03.10.2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார்-என்பதனைஆழ்ந்த வருத்தத்தோடு அறியத்தருகின்றோம்.
இதுவரை அன்னாருக்கு முகநூல் (facebook) ஊடாக அஞ்சலி செலுத்தியவர்களின் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி, திருநெல்வேலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா ஆலாலசுந்தரேசன் அவர்கள் 03-10-2016 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுவாமிநாதர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சேதுபதி(புங்குடுதீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஆலாலசுந்தரேசன் அவர்களின் அன்பு மனைவியும், சுரேஸ், ரமேஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும், மேருமதி, சித்ரா ஆகியோரின் அன்பு மாமியாரும், பிரியா, திவ்யா, வித்யா, சேதுஸ் ஆகியோரின் ஆருயிர் பேத்தியும், காலஞ்சென்றவர்களான குமாரவேலு, பொன்னம்மா, பார்வதிப்பிள்ளை, மற்றும் முருகேசு ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான மீனாட்சிசுந்தரம், சோமசுந்தரேசன், சிவஞானசுந்தரம், சிவயோகசுந்தரம் மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி: |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||
|
எனது குருநாதரும்- அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் இளைப்பாறிய ஆசிரியையுமான,திருமதி ஆலாலசுந்தரேசன் கனகம்மா (ஆலுரீச்சர் )அவர்கள் 03.10.2016 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்-என்ற தகவலை ஆழ்ந்த வருத்தத்தோடு நண்பர்களுக்கு அறியத் தருகின்றேன்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுவோமாக!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!