இலங்கையிலிருந்து மலேரியா நோயை பரிபூரணமாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும்- 1991ல் 4லட்சம் மலேரியா நோயாளிகள் இருந்த இலங்கையில் 2012இல் ஒரு மலேரியா நோயாளியும் இல்லாத நல்லநிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மலேரியா அற்ற இலங்கை என்ற பொருளில் பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிய வருகின்றது.
முன்னர் மலேரியாவின் தாக்கத்திற்கு உள்ளானவர்களிடம்-வெளிநாட்டு மருத்துவர்களின் தலைமையில் நேரடி ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருவதாகவும்- இதன் தொடர்ச்சியாகவே கடந்த மாதம்-அல்லைப்பிட்டியில் சில வருடங்களுக்கு முன்னர் மலேரியா தாக்கத்திற்குள்ளாகி குணமடைந்த ஒருவரை சந்தித்த மருத்துவர்கள் குழு அவரிடமிருந்து விபரங்களைத் திரட்டிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மிக விரைவில் மலேரியா அற்ற இலங்கை என்ற அறிவிப்பு வெளிவரலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது .