பணத்திற்காக சிறுவனின் கழுத்தை நெரித்து ……

தென் இலங்கையில் கடத்த பட்ட ஒன்பது வயது சிறுவன் ஒருவனை கடத்தியவர்கள் 
சிறுவனின் வீட்டிற்கு தொடர்பு கொண்டு எட்டு லட்சம் பணம் தரும்படியும் அவ்வாறு இல்லாவிடின் சிறுவனை கொலை செய்து விடுவோம் என எச்சரித்துள்ளனர் .
இதை அடுத்து தாம் சொன்ன பகுதியில் எட்டு லட்சம் பணத்தை கொண்டு வருமாறு கூறியுள்ளனர் .

குப்பை மேட்டின் மேல் எட்டு லட்சம் பணத்தை வைத்து விட்டு செல்லுமாறு கடத்தல் காரர்கள் கூறியுள்ளனர் .
இந்த விடயத்தை பொலிசாருக்கு தெரிவித்த குடும்பத்தினர் அவர்கள் சொன்னது போலே செய்யும் படி கூறியுள்ளனர் .

குப்பை மேட்டில் பணத்தை வைத்ததும் அதனை எடுக்க வந்த இவர்களை மறைந்திருந்த போலீசார் சுற்றி வளைத்துள்ளனர் .
அதில் ஒருவர் தப்பி விட்டார் ஒருவர் சிக்கி கொண்டார் .தம்மை அடையாளம் காட்டி கொள்வான் என்ற அச்சத்தில் சிறுவனின் கழுத்தை நெரித்து விக்டோரியா நீர் தேக்கத்தில் சிறுவனை வீசியுள்ளனர் .

அவ்வேளை அங்கிருத்த கல் ஒன்றை பிடித்து தப்பிய சிறுவன் குருநாகல புத்தளம் பகுதி வீதியில் மிதந்துள்ளான் .அவ்வழி வந்த வாகனம் ஒன்றை மறித்து இவ் விடயம் தொடர்பாக கூறவே வாகனத்தில் வந்தவர்கள் பொலிசாரிடம் கையளித்துள்ளனர் .

இவனை கடத்தியவர் இவர்களது வீட்டில் வாடகைக்கு இருந்தவர் என கண்டறிய பட்டுள்ளது .
இந்த கடத்தலில் ஈடு பட்டவர்கள் முன்னாள் இராணுவத்தினர் என தெரிய வந்துள்ளது

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux