அல்லைப்பிட்டி கறண்டப்பாய் ஸ்ரீமுருகன் ஆலய நிர்வாகம் நன்றி தெரிவிப்பு!

02.09.2010 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற அல்லைப்பிட்டி கரண்டப்பாய் முருகன் ஆலய அலங்காரத் திருவிழாவை மிகவும் திறம்படச் செய்துமுடித்த ஐயா அவர்களுக்கும், இவ் அலங்காரத் திருவிழாவைப் பொறுப்பேற்று முன்நின்று நடாத்திய அனைத்து
அன்பு உள்ளங்களுக்கும், அடுத்து அதற்கு முழுஒத்துழைப்பு நல்கிய அனைத்து அல்லை ஊர் மக்களுக்கும்,நிகழ்ச்சிகளைத் தந்து திருவிழாவைச் சிறப்பித்த கலைஞர்கள் அனைவருக்கும் இவ்விழாவைச் சிறப்பாக நடத்துவதற்கு மனம் உவந்து பணஉதவி வழங்கிய அல்லை ஊர் அன்பு இதயங்களுக்கும் அத்தோடு திருவிழாவின் நிகழ்வுகளை நிழற்படம் எடுத்து உலகமெல்லாம் பரந்து வாழும் அல்லைப்பிட்டி மக்களின் பார்வைக்கு வைத்த அல்லையூர் இணையத்திற்கும் எங்கள் இதயம் நிறைந்த அன்பு கலந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

முக்கிய குறிப்பு:

கரண்டப்பாய் முருகன்ஆலயத்தின் புனர் அமைப்பு வேலைகள் இன்னும் முழுமையாக பூர்த்தி அடையவில்லை என்பதை அறியத்தருகின்றோம். குறிப்பாக மதில் வேலை பூர்த்தி அடையவில்லை. அடுத்து இவ்வாலயத்தைப் பொறுப்பேற்றுக் கட்டியவருக்கு இரண்டு இலட்சம் ரூபாய்கள் கொடுக்கு மதி இருப்பதால் ஆலய வேலை இடை நிறுத்தப் பட்டுள்;ளது என்பதை அறியத் தருவதோடு வெளிநாடுகளில்வசிக்கும் அல்லை ஊர் மக்களிடம் இவ்வாலயம் தனது வளர்ச்சிக்காக உதவி கோரி நிற்கிறது.

ஆலய நிர்வாகத்தினர்;
(அல்லை ஊர் கரண்டப்பாய்முருகன்ஆலயம்)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux