நாகபட்டினம் வேளங்கண்ணியின் கோலாகல தேரோட்டம்!

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateநாகை: உலகப் புகழ் பெற்ற வேளங்கண்ணி தேவாலய தேரோட்டம் இனிதே நடந்தது. இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர். எதிலும் புதுமையாக செய்யும் தினகரன் இணையத்தளம் உலகெங்கும் உள்ள பக்தர்களுக்கு தேரோட்ட நேரடி காட்சியை ஒளிப்பரப்பியது, இதனால் இணையதள வாசகர்கள் பெரிதும் பயன் அடைந்தனர்.
 

விவரம் வருமாறு – வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கியது. பின்னர் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பேராலய கீழக்கோயிலில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை பல்வேறு மொழிகளில் திருப்பலி நடந்தது. இன்று இரவு 7.30 மணிக்கு நடந்த பெரியத்தேர் பவனியை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.  பெரியத்தேரில் ஆரோக்கிய மாதா எழுந்தருள, அதை பின் தொடர்ந்து 6 சிறிய சப்பரங்களில் அந்தோணியார், செபஸ்தியார், உத்திரிய மாதா, மைக்கேல் சம்மனசு, சூசையப்பர் மற்றும் ஏசுநாதர் ஆகியோர் எழுந்தருளினர். பின்னர் கடற்கரை சாலை வழியாக ஊர்வலமாக வந்து பேராலய முகப்பை வந்தடைந்தது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux