
இவர்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள வீட்டில் குடியிருந்தனர். சீனிவாசன் வேலைக்கு செல்வது இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும்.
சில தினங்களாக சீனிவாசன் வேலைக்குச் செல்லாததால், வீட்டுச் செலவுக்கு பணம் கொடுக்கவில்லை. இதனால் கணவன்- மனைவி இடையே நேற்று இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த காமாட்சி நேற்று இரவு 11 மணி அளவில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். பின்னர் 4-வது மாடியில் இருந்து அலறி துடித்தபடி கீழே குதித்தார்.
உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து, காமாட்சியை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை
பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடும்பத் தகராறில் எரியும் தீயுடன் பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.