காணாமல் போனவன் பகுதி 2

காணாமல் போனவன்!

காணாமல் போனவன்-பகுதி 2
(ஒரு நண்பனைப் பற்றிய கதை)
நானும் எனது நண்பனும் ஊரில் மட்டுமல்ல,அயற்கிராமங்களான மண்கும்பான்மண்டைதீவு போன்றவற்றிக்கும் அடிக்கடி சென்று வருவது வழக்கம் என்னையும் எனது நண்பனையும்,தெரியாதவர்களே! இல்லையென்று சொல்லலாம். அந்தளவுக்கு பிரபலமாய் இருந்த நேரமது.இளமையின் கம்பீரம்,
எதையுமே செய்து பார்க்க வேண்டும். என்ற துடிப்பு -வேகம் எல்லாமே என்
நண்பனிடம் இருந்தது.அவன் ஆர்ப்பாட்டம் இல்லாமல் காரியங்களை செய்து
முடித்துவிட்டு,வந்துநின்பான்.
நானோ எதிர்மாறு சிறுவிசயம் என்றாலும்-
அட்டகாசமாய்,வெளிப்படையாக,தொடங்குவேன்.அவனோ என்னை எச்சரிப்பான்.அவன் எனக்கு அடிக்கடி சொல்லும் பழமொழி”இறைச்சி தின்றாய்
என்பதற்காக பல்லை குத்தாதே “என்பான்.
ஒருவன் பெற்றோர்களிடம்,சகோதரர்களிடம்- சொல்ல முடியாத விடயங்களைநண்பர்களுக்கு இடையே பகிர்ந்து கொள்வார்கள்.நானும்,எனது உயிர் நண்பன்சாந்தனும்,அப்படித்தான் பழகினோம்.அவனுக்கும்-எனக்கும் இடையில் எந்தஒளிவு- மறைவு இருந்ததேயில்லை.நாங்கள் இருவரும் மாலையில் ஒன்றாகசுற்றுவோம்.பின்னர் வீட்டிற்குச் சென்று இரவுச்சாப்பாட்டை முடித்து விட்டுமறுபடியும் “தட்டாக்குளம்”என்று அழைக்கப்படும்.என் நண்பனின்வீட்டிற்குஅருகில் உள்ள மணற்பரப்பில்,நிலவொளியில்-நானும்,எனது நண்பனும்
அவனது நாயும் ஒன்றாக கூடுவோம்.
எங்களைத் தொடர்ந்து-மற்றய நண்பர்களும் வந்து எங்களோடு சங்கமிப்பார்கள்.
நிலவொளியிலே-நடக்கின்ற இந்த சிறிய கூட்டத்திலே-குறைந்தது நான் எனது
நண்பன் உட்பட- குறைந்தது ஜந்துபேராவது கலந்திருப்போம்.எம்மை காவல்
காப்பதுபோல்-எமக்கருகில் நண்பனின் வெள்ளைநாய் படுத்திருக்கும்.
கூட்டத்தில்-அரசியல் தொடங்கி,வாலிபத்தின் இளமை வரை-அணுவணுவாக
விவாதிப்போம்.எங்களருகில் படுத்திருந்த-வெள்ளைநாய் -எங்களின் விவாதத்தின் மூர்க்கம் கண்டு ஊ-என்று ஊளையிடும். பின்னர் அது எனது
நண்பனின் அதட்டலோடு மறுபடியும் அடங்கி மவுனமாய் படுத்திருக்கும்.
எங்களுக்குள்-எழும் சந்தேகங்களை கடும் விவாதங்களாக மாற்றி அதற்கு
விடைதேட ஒருநாள் இராசரட்ணம் அண்ணர் தலைமையில்-11 மணிக்கு
பக்கத்தில் இருக்கும்-அல்லையூர்-பண்டிதர் ஆறுமுகம் ஜயாவின் வீட்டிற்கு
படையெடுத்தோம்.நாங்கள் 6பேர் வீதி ஒழுங்கையால் சென்று பண்டிதர்
ஜயாவின்-வாசலை அடைந்தபோது!அவருடைய வீட்டுமுற்றத்தில்
சாய்மனைக்கட்டிலில்,பண்டிதர் ஜயா படுத்திருக்க,அவருக்கு கீழே மணலில்
கையை தலையணையாய் பாவித்து இருபக்கமும் இருவர் படுத்திருப்பதும்.
பண்டிதர் ஜயா அவருக்கே உரித்தான-பாணியிலே நீண்ட கதையொன்றைச்
சொல்வதும்.அதற்கு அருகில்படுத்திருந்த இருவரும்,ஆமாம் போடுவதும்
இடையிலே உறங்கிப்போனவர்களை மீண்டும் எழுப்பி பண்டிதர் ஜயா கதை
சொல்லுவதை வீதியில் நின்று பார்த்த எங்களுக்கு- வெடிச்சிரிப்பை வரவைத்தது.
கீழே படுத்திருந்த அவர்கள் யார்?
இன்னும் வரும்….

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux