அல்லையூர் இணையத்தினால்,ஆவணி மாதம்  மேற்கொள்ளப்பட்ட அறப்பணி நிகழ்வுகளின் விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தினால்,ஆவணி மாதம் மேற்கொள்ளப்பட்ட அறப்பணி நிகழ்வுகளின் விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம் “ஆயிரம் தடவைகள் அன்னதானம்” என்னும் பசிபோக்கும்  புனிதப் பணியினை  சிறப்பாக செயற்படுத்தி வருவது நீங்கள் அறிந்த செய்தியாகும். 

இது வரை உங்கள் பேராதரவுடன்  150 தடவைகளுக்கு மேல் தாயகத்தில் ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் மாணவர்கள்-முதியவர்கள்-விழிப்புலன் இழந்தவர்கள்  என  நூற்றுக்கணக்கானவர்களுக்கு  அன்னதானம் வழங்கியுள்ளோம்.

இப்பணியினை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் செயற்படுத்தி வருவதோடு-மேலும் விரைவு படு்த்த எண்ணியுள்ளோம்.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஆவணி மாதம் பல அறப்பணி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் அல்லையூர் இணையத்தின் இயக்குநர் திரு செல்லையா சிவா அவர்கள் நேரடியாக கலந்து கொண்டார்.மேலும் தாயகத்தில் யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு நிர்கதியாக நிற்கும்-எமது உறவுகளின் பசி போக்கிட நீங்கள் முன் வரவேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்கின்றோம்.

தாயகத்தில்,ஆவணி மாதம் நடைபெற்ற-அறப்பணி நிகழ்வுகளின் சுருக்கும்….

01- அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி சின்னத்தம்பி நல்லம்மா அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு 08.08.2016 அன்று சிறப்புணவு வழங்கப்பட்டது.

02-லண்டனில் வசிக்கும்-மண்டைதீவைச் சேர்ந்த, திருமதி மதனராசா கேமலதா அவர்களினால்,50  ஆயிரம் ரூபாக்கள் பெறுமதியான கறவைமாடு-முல்லைத்தீவைச் சேர்ந்த,கணவனை இழந்த,மூன்று பிள்ளைகளின் தாயான திருமதி பத்மநாதன் காளிப்பிள்ளை அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கி வைக்கப்பட்டது.அத்தோடு அன்றைய தினம்  14.08.2016  இரவு மகாதேவா சிறுவர் இல்ல மாணவர்களுக்கு சிறப்புணவும் வழங்கப்பட்டது.

03-பிரான்ஸில் காலமான-மண்கும்பானைச் சேர்ந்த, அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் 8ம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு-15.08.2016 அன்று மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் பிரார்த்தனையுடன்-சிறப்புணவு வழங்கிய நிகழ்வு இடம் பெற்றது.

04-புங்குடுதீவு-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, அமரர்கள் திரு, திருமதி கதிர்காமு-நல்லம்மா அவர்களின்  நினைவு தினத்தினை முன்னிட்டு 17.08.2016 அன்று  மகாதேவா சுவாமிகள் இல்லத்து மாணவர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.

05-கிளிநொச்சி ஜெயந்தி நகரில் அமைந்துள்ள மகாதேவா  சிறுவர் இல்ல மாணவிகள் மூவருக்கு 19.08.2016 அன்று நடத்தப்பட்ட பூப்புனித நீராட்டு விழாவின் போது -மதிய சிறப்புணவிற்கான 40 ஆயிரம் ரூபாக்களை  அல்லையூர் இணையத்தின் இயக்குநர் திரு செல்லையா சிவா வழங்கினார்.

06-யாழ் தீவகம் கரம்பனைச் சேர்ந்த, அமரர் குணரத்தினம் அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு 20.08.2016 அன்று யாழ் கைதடியில் அமைந்துள்ள விழிப்புலன் இழந்தவர்கள் வசிக்கும் தொழிற்பூங்கா இல்லத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டது.

07-ஜெர்மனியில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு சுந்தரம்பிள்ளை தனேந்திரன் அவர்களின் 37வது பிறந்த நாளினை முன்னிட்டு-28.08.2016 அன்று யாழ் கொழும்புத்துறையில் அமைந்துள்ள-சென் ஜோசப் முதியோர் இல்லத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டதுடன்-மேலும் யாழ் கைதடியில் அமைந்துள்ள விழிப்புலன் இழந்தவர்களின் இல்லத்திற்கு 32 ஆயிரம் ரூபாக்கள்  பெறுமதியில்- 2000 லீற்றர் கொள்ளக்கூடிய தண்ணீர் ராங் ஒன்றும்-அயன் மேசை ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டன.

எமது இணையத்தின் மீது நம்பிக்கை வைத்து -லட்சக்கணக்கான ரூபாக்களை  அறப்பணிக்கு வழங்கிய நல் இதயங்கள் அனைவருக்கும்-எமது அறப்பணிக் குடும்பத்தினரின்  நன்றியினைக் காணிக்கையாக்குகின்றோம்.

img_0525-768x1024 img_0577-768x576 1-5-768x512 14039973_1354339657927806_5380927871520595265_n 14046137_1354392971255808_7190944913231259549_n 14051697_1354394541255651_7896893232252253250_n 14045756_1354394341255671_1945044844656146571_n 14051752_1360231257338646_7333001826050880168_n 14054963_1360231574005281_2738433536547530831_n 14063827_1355349134493525_5146241681390358666_n14192701_1366432233385215_1121113708002422990_n-1 14102271_1366432103385228_1206431898709946801_n-1 14212010_1366432413385197_4456660801078226980_n 14142000_1365172900177815_4023694219989828152_n 14100417_1365173040177801_5576851100571466242_n image-0-02-01-05f0a24fb816a22e7c2e59c1a2fa1abeceac6602f139f1853c6cb290e1e778f5-v-1 image-0-02-01-9b13cf7d86b8c38ee3951cbba4da5c602db2fe23ce3591f61e0fdb5cf30d17a1-v image-0-02-01-9d0a805de1fa19eb8af8495551d6c84ee90c098377aaa8f173a93eb670f01662-v image-0-02-01-860c0a01720b65f819d3d3e3b2b48eb4359ba655a41b668e38eb866652d382f7-v image-0-02-01-14536f4c6ec921329bbc4bda8839a79b25b5d01b49df1600a67a946afa592b7d-v image-0-02-01-b9006933505800489db717a1f56e443594d36aeccfd9a9e2c38c947cc298fba8-v

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux