சுவிஸில் அதிக குற்றம் செய்வோரில் இலங்கைத் தமிழரும் முன்னணியில்!

சுவிற்சலாந்தில் குற்றச் செயல்களில் அதிகம் ஈடுபடுகின்ற குடியேற்றவாசிகள் பட்டியலில் இலங்கைத் தமிழர்களும் முன்னணியில் இருக்கின்றார்கள் என்று ஆய்வு ஒன்றின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சுவிஸின் புள்ளி விபரத் திணைக்கள நிபுணர் குழுவினர் முதன்முறையாக அங்குள்ள வெளிநாட்டவர்களின் குற்றச் செயல்கள் சம்பந்தமாக ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளனர்.
அவர்கள் கடந்த வருடம் 18 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்ட குடியேற்றவாசிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்த குற்றச்செயல்கள் சம்பந்தமான பொலிஸ் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வை மேற்கொண்டிருந்தனர்.
அங்கோலா, நைஜீரியா, அல்ஜீரியா, ஐவரி கோஸ்ற், டொமேனியன் குடியரசு ஆகிய நாட்டவர்களுக்கு அடுத்தபடியாக இலங்கைத் தமிழர்கள் அங்கு குற்றச்செயல்களில் அதிகம் ஈடுபட்டு வருகின்றார்கள் என்று இவ்வாய்வின் முடிவு தெரிவிக்கின்றது.
சுவிற்சலாந்தினரைக் காட்டிலும் 4.7 மடங்கு அதிகமாக இலங்கைத் தமிழர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux