மட்டக்களப்பில் கைவிடப்பட்ட நிலையில் சிசுவொன்று கண்டுபிடிப்பு

கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிசுவொன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

4 நாட்களைக் கொண்ட இந்த ஆண்குழந்தை மட்டக்களப்பு இருதயபுரம் பஸ் தரிப்பு நிலையத்திற்குள்ளிருந்து கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்குழந்தை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 


Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux