தீவகம் மண்கும்பான் முருகனின் அன்னதான மண்டபம் 19ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது -படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் மண்கும்பான் முருகனின் அன்னதான மண்டபம் 19ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது -படங்கள் விபரங்கள் இணைப்பு!

sssss (1)

யாழ் தீவகம் மண்கும்பானில்,கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் முருகப் பெருமானை நாடி வரும் பக்தர்களின் பசி போக்கிடும் நோக்கோடு-ஆலய வளாகத்திற்குள் மிகப்பிரமாண்டமாக,அன்னதான மண்டபம் ஒன்று அமைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

நீண்ட காலத்தின் பின் -கடந்த வருடம்,பத்துநாட்கள் அலங்காரத் திருவிழா நடைபெற்றதுடன்-தொடர்ந்து ஆலயத்தினை முழுமையாகப் புனரமைக்கும் பணிகளும்  தற்போது   மேற்கொள்ளப்பட்டு வரு.

 வசந்த மண்டபம் மற்றும் சில உப விக்கிரகங்களின் கோவில்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும்-மேலும் புலம் பெயர் நாடுகளிலோ அல்லது உள்நாட்டிலோ வசிக்கும்- முருக பக்தர்கள் இப்புனரமைப்புப் பணிகளுக்கு உதவிட முன்வருமாறும் ஆலய நிர்வாகம் அல்லையூர் இணையத்தின் ஊடாக மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இம் மாதம் 19ம் திகதி கும்பாபிஷேகம்  நடைபெற்று-தொடர்ந்து 21.08.2016 முதல் 15 நாட்கள் அலங்காரத் திருவிழா நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர்-அனைத்து வேலைகளும் நிறைவு பெற்று-அன்னதான மண்டபமும் திறந்து வைக்கப்பட வேண்டும் என்ற முனைப்போடு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக ஆலய நிர்வாகம் எமது இணையத்திற்கு தெரிவித்துள்ளது.

அன்னதான மண்டபம் அமைக்கும் முருக பக்தர்…

பிரான்ஸில் வசிக்கும்-மண்கும்பானைச் சேர்ந்த,முருக பக்தர் ஒருவர்-காலமான தனது அன்பு மனைவியின் நினைவாக-முருகனிடம் நாடி வரும் பக்தர்களின் பசி போக்கிடும்- இடமான இந்த அன்னதான மண்டபத்தினை மிகப்பிரமாண்டமாக அமைத்துத் தர முன்வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர் வரும் 19.08.2016 அன்று அன்னதான மண்டபம் திறந்து வைக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர் காலத்தில் பசியோடு வரும் பக்தர்களுக்கு வயிறாற உணவு வழங்கும் இடமாக மண்கும்பான் முருகனின் சந்நிதானம் விளங்கும் என நம்புகின்றோம். 

sssss (2) sssss (5) sssss (10) sssss (11) sssss (7) sssss (8) sssss (4) sssss (9) sssss (6) sssss (16) sssss (15) sssss (14) sssss (20) sssss (19) sssss (22) sssss (21) sssss (24) sssss (25) sssss (18) sssss (17) sssss (27)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux