துயர் பகிர்வோம்

அல்லையூர் இணையத்தின் வளர்ச்சியில் பெரிதும் பங்கெடுத்து வரும்
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த திரு வரப்பிரகாசம் பரிமளகாந்தன் அவர்களின்
அன்பு மாமியார் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன்
அல்லையூர் இணையம் தெரிவித்துக்கொள்கின்றது.
           மரண அறிவித்தல்

யாழ்ப்பாணத்தை வாழ்விடமாகக் கொண்ட திருமதி நமசிவாயகம் நாகம்மா
அவர்கள் 19/08/2010 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற திரு நமசிவாயத்தின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற கங்கைவேணியன், வைகுந்தன்(ஸ்ரீ பாலாம்பிகா புத்தக நிலையம் யாழ்ப்பாணம்) திருமதி திருவேங்கடவல்லி பரிமளகாந்தன்(யாழ்ப்பாணம்)ஆகியோரின் பாசமிகு தாயாரும்,திருமதி அருந்தவதேவி கங்கைவேணியன்,திருமதி தமிழ் செல்வி வைகுந்தன்,திரு வரப்பிரகாசம் பரிமளகாந்தன்(m-o-s யாழ்)ஆகியோரின் பாசம்மிகு மாமியாரும்,கங்கைதாசன்(லண்டன்)கோபிகா(வேம்படி இந்து மகளிர் கல்லூரி)ஆகியோரின் பாசம்மிகு பேத்தியாரும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரிகைகள் இல-422-k-k-sவீதியில்
உள்ள அன்னாரின் இல்லத்தில் 19/08/2010 அன்று மாலை 2மணிக்கு நடைபெற்று
பின்னர் தகனக்கிரிகைகள் யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் நடைபெற்றது.இவ் அறிவித்தலை உற்றார்- உறவினர்கள-நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
தொடர்புகளுக்கு***
திரு வ. பரிமளகாந்தன்***தொலைபேசி இலக்கம்—0094718485198 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux