தீவகம் மண்கும்பான் முருகன் கோவிலில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும்,அன்னதான மண்டபம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் மண்கும்பான் முருகன் கோவிலில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும்,அன்னதான மண்டபம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

IMG_8240 copy

யாழ் தீவகம் மண்கும்பானில்,கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் முருகப் பெருமானை நாடி வரும் பக்தர்களின் பசி போக்கிடும் நோக்கோடு-ஆலய வளாகத்திற்குள் மிகப்பிரமாண்டமாக,அன்னதான மண்டபம் ஒன்று அமைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

நீண்ட காலத்தின் பின் -கடந்த வருடம்,பத்துநாட்கள் அலங்காரத் திருவிழா நடைபெற்றதுடன்-தொடர்ந்து ஆலயத்தினை முழுமையாகப் புனரமைக்கும் பணிகளும்  தற்போது   மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 வசந்த மண்டபம் மற்றும் சில உப விக்கிரகங்களின் கோவில்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும்-மேலும் புலம் பெயர் நாடுகளிலோ அல்லது உள்நாட்டிலோ வசிக்கும்- முருக பக்தர்கள் இப்புனரமைப்புப் பணிகளுக்கு உதவிட முன்வருமாறும் ஆலய நிர்வாகம் அல்லையூர் இணையத்தின் ஊடாக மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றது.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள வருடாந்த திருவிழாவிற்கு முன்னர்-அனைத்து வேலைகளும் நிறைவு பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்போடு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது.

அன்னதான மண்டபம் அமைக்கும் முருக பக்தர்…

பிரான்ஸில் வசிக்கும்-மண்கும்பானைச் சேர்ந்த,முருக பக்தர் ஒருவர்-காலமான தனது அன்பு மனைவியின் நினைவாக-முருகனிடம் நாடி வரும் பக்தர்களின் பசி போக்கிடும்- இடமான இந்த அன்னதான மண்டபத்தினை மிகப்பிரமாண்டமாக அமைத்துத் தர முன்வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர் காலத்தில் பசியோடு வரும் பக்தர்களுக்கு வயிறாற உணவு வழங்கும் இடமாக மண்கும்பான் முருகனின் சந்நிதானம் விளங்கும் என நம்புகின்றோம். 

d-51-1024x683-768x512image-0-02-01-35863b1ce8e00119a552b51836fe7e6dcfa9e1a56e6e0da4f669a3c560a8e472-V image-0-02-01-d075cba9f93a10bf6c876357fdebd3dd772b066bca856405aef0453fb5d73ef1-V image-0.02.01.e04316bdff60507ed2c04cc3cd7bf2a693d5ff5dd14efe39466c2c4b22f492a6-Vd-32-1024x683-768x512 image-0.02.01.08c48a9763734a262588c30dc08f40d639a656408d642def7465b49ec1aae755-V image-0-02-01-7d6f19e59ce3febb8b9d0551b6d4afbab3eaef2512df969127fdb89e86a03349-V image-0-02-01-35aa0997d6704f49fa746f1667ebed4be9394a7cf2a0fcc2d0368c371cefbc4d-V image-0-02-01-740e0a590a552d700d9b5c5176f2784ad3d87a22f1e57166c3737c26ed65125d-V image-0.02.01.fb668f42128f152306198420877b46feb92749f9f16cdf7c42a4b3891dbbe3e2-V image-0-02-01-d075cba9f93a10bf6c876357fdebd3dd772b066bca856405aef0453fb5d73ef1-V image-0-02-01-fc4047b6583083a6fea637014772c91527e17a0c430017ff79612a4dcb8fa7ef-V image-0-02-01-a0fa26356916d5c8e826ec62827b75ccfd73a245dad06b0a485dc3e6e22e8e04-V image-0-02-01-3b1a3b7cef4f875262a33e42f38b6eedfa734a58a75aaacc662601908b62fbf3-V image-0-02-01-823702d572c257573e47e9283f5e5704977271f9090195b0c3cf9d6ad50500aa-V

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux