அல்லைப்பிட்டியில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும் மூன்றுமுடி அம்மனின் வருடாந்த ஆனி உத்தரத்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லைப்பிட்டியின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பெருமளவான மக்கள் ஆனி உத்தரத் திருவிழாவில் பக்தியோடு கலந்து கொண்டதாக மேலும் தெரிய வருகின்றது.
கடந்த பல வருடங்களாக- மூன்றுமுடி அம்மனின் ஆனி உத்தரத்திருவிழாவினை லண்டனில் வசிக்கும் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த-திரு திருமதி தெய்வேந்திரா ஜெயராணி தம்பதியினரே சிறப்பாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.