அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவில் சிறப்பாக இடம்பெற்ற-அன்னதான நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவில் சிறப்பாக இடம்பெற்ற-அன்னதான நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

ddd (1)

அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள புனித கார்மேல் அன்னையின் வருடாந்த,பெருநாள் விழாவின் போது- 16.07.2016 சனிக்கிழமை அன்று-அமரர்கள் திரு,திருமதி இரத்தினசபாபதி-சிவயோகலட்சுமி தம்பதியினரின் ஞாபகார்த்தமாக-பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

அமரர்கள்  இரத்தினசபாபதி-சிவயோகலட்சுமி  தம்பதியினரால் -புனித அன்னையின் வருடாந்த,பெருநாள் விழாவிற்கு-காலங்காலமாக , அன்னதானம் வழங்குவது வழமையான ஒன்றாகவே முன்னர் இருந்து வந்தது.

அன்னார்களின் மறைவுக்குப் பின்னரும்-யுத்த அனர்த்தங்களுக்கிடையிலும்-அப்பணியினை,அமரர் இரத்தினசபாபதி-அவர்களின் மைத்துனரான,  பெரியவர் நடேசபிள்ளை  அவர்கள் தொய்வின்றி முன்னெடுத்து வந்தார்.

பெரியவர் நடேசபிள்ளை அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிகவேலைப்பளு மற்றும் மூப்பின் காரணமாக-அவரைச்சிரமப்படுத்தாது-அமரர்கள் இரத்தினசபாபதி-சிவயோகலட்சுமி  தம்பதியினரின் பிள்ளைகளின் ஒன்றுபட்ட நிதியுதவியுடனும்-வேண்டுகோளுடனும்-கடந்த நான்கு வருடங்களாக-அல்லையூர் இணையம் பொறுப்பெடுத்து-பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் நேரடி மேற்பார்வையில் அன்னதான நிகழ்வினை சிறப்பாக நடத்தி வருகின்றது.

இவ்வருடமும் கடந்த வருடத்தைப் போல -ஆயிரம் உணவுப் பொட்டலங்கள்-புனித அன்னையின் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட நிகழ்வில், அமரர்கள்  இரத்தினசபாபதி-சிவயோகலட்சுமி  தம்பதியினரின் புதல்வி திருமதி  சேனாதிராஜா கௌரிநாயகி அவர்கள் நேரடியாகக் கலந்து கொண்டு உணவுப் பொட்டலங்களை வழங்கி வைத்து-அன்னதானப் பணிக்கு மேலும் சிறப்புச் சேர்த்தார்.

அல்லைப்பிட்டி என்ற இச்சிறிய கிராமத்தில்-அமைந்துள்ள புனித கார்மேல் அன்னையின் ஆலயத்தில் மட்டுமே-அனைத்து மக்களும் அன்னையின் வருடாந்த பெருநாளுக்கு ஒன்று கூடுவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

“அல்லையூர் இணையத்தின்  1000 தடவைகள் அன்னதானம்” என்னும் அன்னதானப்பணியின்  140வது சிறப்பு நிகழ்வாக-இந்நிகழ்வு  அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

13702437_1323990250962747_245678023_o ddd (2) ddd (3) ddd (4) ddd (5) ddd (6) ddd (7) ddd (8) ddd (9) ddd (10) ddd (11) ddd (12) ddd (13) (1) ddd (14) ddd (15) ddd (16) ddd (17) ddd (18) ddd (19)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux