அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த,திருமதி வைத்திலிங்கம் ஞானம்மா அவர்கள் 06.07.2016 புதன்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பிலிப்பு பிலிப்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மரியசீலன் அவர்களின் அன்பு மனைவியும்- காலஞ்சென்றவர்களான மாகிறட், திரேசம்மா, அல்பிரட்ரம்மா, உத்தரியம் (நல்லம்மா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், -அருமை(பிரான்ஸ்), காலஞ்சென்ற செல்வம், அன்ரன்(லண்டன்), அருள்(பிரான்ஸ்), வேதநாயகம்(இலங்கை), அனிற்றா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும் ஆவார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07.07.2016 வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அல்லைப்பிட்டி புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்ட பின்னர்-அல்லைப்பிட்டி சேமக்காலையில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
2ம் வட்டாரம்,
அல்லைப்பிட்டி,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு…0094773697954
தகவல் |
சிறிய மகன்-அன்ரன் தேவா-லண்டன் |