யுனேஸ்கோ என்ற சர்வதேச அமைப்பு-ஜெர்மனியில் 10 நாடுகளை உள்ளடக்கி (பிரான்ஸ், போலாந்து,டென்மார்க், செக் குடியரசு, ஆஸ்திரியா,சுவிட்சர்லாந்து, லுக்சம்பேர்க்,பெல்ஜியம்,நெதர்லாந்து, ஜேர்மனி) கடந்த 3 வருடங்களுக்கு மேலாக நடத்திய கலாச்சார நடனங்களின் தேர்வில் பங்குபற்றிய, அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, செல்வன் கபிலேசன் கமலதாசன் முதற்பரிசினை பெற்றுக் கொண்டார்.
இப்போட்டியானது 2014 தொடக்கம் 2016 வரை ஜெர்மனியில் நடைபெற்றது.
இப்போட்டியில் 6000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியதுடன்(பிரான்ஸ், போலாந்து,டென்மார்க், செக் குடியரசு, ஆஸ்திரியா,சுவிட்சர்லாந்து, லுக்சம்பேர்க்,பெல்ஜியம்,நெதர்லாந்து, ஜேர்மனி )49 உலக கலாச்சார நடனங்கள் தேர்வில் பங்குபற்றின.
இலங்கையில் பரதக்கலையினைக் கற்றுக் கொண்ட-மாணவன் கபிலேசனும் இப்போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்று வந்தார்.கடுமையான விதிமுறைகளின் படி-ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னரே-கபிலேசன் இப்போட்டியில் கலந்து கொண்டார்.
கடந்த மாதம் நடைபெற்ற- இறுதிப் போட்டியில் முதற்பரிசினை பெற்றுக் கொண்ட-செல்வன் கபிலேசனுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கையெழுத்துடன் பட்டம் வழங்கப்பட்டதுடன்-23500 euro க்கள் பணமும் வழங்கப்பட்டது.
இப்பணத்தினை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இரு இலங்கை குழந்தைகளின் கல்விக்காக-யுனெஸ்கோ அமைப்பிடம் வழங்கினார்-செல்வன் கபிலேசன் கமலதாசன்.
எமது கிராமத்திற்கு பெருமை தேடித்தந்துள்ள-செல்வன் கபிலேசன் கமலதாசனை,அல்லையூர் இணையம் பாராட்டி வாழ்த்துகின்றது. அத்தோடு இவரது திறமையினை-வெகு விரைவில் மக்கள் முன் கொண்டு வருவதற்கான முயற்சியினை மேற்கொண்டுள்ளோம் என்பதனையும் அறியத்தருகின்றோம்.