பிரான்ஸில் கடந்த 28.05.2016 அன்று இறைவனடி சேர்ந்த, முல்லைத்தீவு முள்ளியவளையைச் சேர்ந்தவரும்-மண்கும்பானைச் சேர்ந்த, திரு செல்வரத்தினம் சசிகுமார் அவர்களின் அன்பு மனைவியுமான- அமரர் திருமதி சசிகுமார் குபேரினி அவர்களின் 31ம் நாள் நினைவு தின பிரார்த்தனை நிகழ்வும்-மதிய போசன நிகழ்வும்-27.06.2016 திங்கட்கிழமை அன்று கிளிநொச்சி ஜெயந்தி நகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
திரு செல்வரட்ணம் சசிகுமார் அவர்களின் வேண்டுகோளின் பேரிலும்,நிதி அனுசரணையிலும்-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-இப்பிரார்த்தனை நிகழ்வு நடைபெற்றது.
அல்லையூர் இணையத்தின் அறப்பணியாளர் திரு இ.சிவநாதன் உட்பட-அன்னாரின் உறவினர்கள் சிலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அல்லையூர் இணையம் முன்னெடுத்து வரும்-ஆயிரம் தடவைகள் அன்னதானம் என்னும் பணியின் 135 வது சிறப்பு நிகழ்வாக -திருமதி அமரர் சசிகுமார் குபேரினி அவர்களின் 31ம் நாள் நினைவு தின நிகழ்வு அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.