ஜெர்மனியில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி சண்முகம் புஷ்பவதி அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோப் பதிவு!

ஜெர்மனியில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி சண்முகம் புஷ்பவதி அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோப் பதிவு!

யாழ். மண்கும்பான் மேற்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கஸ்தூரியார் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் புஷ்பவதி அவர்கள் 02-06-2016 வியாழக்கிழமை அன்று ஜெர்மனி Dortmund இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,

இந்திராணி(Berlin), இராஜேஸ்வரன்(நதியா நகை மாடம்- யாழ்ப்பாணம்), தருமராணி(Dortmund), சர்வேஸ்வரன்(லண்டன்), ஜெகதீஸ்வரன்(புதிய நதியா நகை மாடம்- யாழ்ப்பாணம்), யோகராணி(Berlin) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராசலெட்சுமி, சகாதேவன், காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், சந்தானலெட்சுமி, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரமலிங்கம்(Berlin), இரட்ணபவா(யாழ்ப்பாணம்), சத்திதாசன்(Dortmund), ஜெகதீஸ்வரி(லண்டன்), ஜெயந்தி(யாழ்ப்பாணம்), பாஸ்கரன்(Berlin) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, ஐயம்பிள்ளை, சரஸ்வதி, பூங்காவனம், மற்றும் செல்லத்துரை(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிரோஷன், துட்சியா, நிஷாகரன், நிஜங்கன், கெளசன், நதியா, நிமலன், சபிதா, பிரியங்கா, பிரியந், அஜித், றஜித், சஜினா, சஸ்விந், ஜெயதிபிகா, ஜவனிகா, சுஜான், விதுஜான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் கடந்த 14.06.2016 செவ்வாய்க்கிழமை அன்று(Dortmund) ஜெர்மனியில் நடைபெற்றன.

அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலய,மாணவர்களின் நன்மை கருதி-அமரர் திருமதி சண்முகம் புஷ்பவதி அவர்களின் புதல்வர் ஜெகதீஸ்வரன் (கண்ணன்) அவர்கள் பல லட்சம் ரூபாக்கள் பெறுமதியான நிலத்தினை பாடசாலைக்குப் பெற்றுக் கொடுத்ததை, நன்றியோடு நினைவுகூருவதுடன்-திரு ஜெகதீஸ்வரன் (கண்ணன்) அவர்களின் அன்புத் தாயாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல ஆண்டவனை-   அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலய அதிபர் திரு M.பத்மநாதன் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்களுடன்- இணைந்து  அல்லையூர் இணையமும்,வேண்டி நிற்கின்றது.

ஓம் சாந்தி!ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

allaiyoor copy (15)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux