தீவகம் வேலணை கிழக்கைச் சேர்ந்தவரும்-அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர்களான,அமரர் பொ.தியாகராசா மற்றும் திரு பொ.நடராசா ஆகியோர்களது அன்புச் சகோதரியுமான திருமதி பாலசிங்கம் சிவஈஸ்வரி (கண்ணம்மா ) அவர்கள் கடந்த 05.06.2016 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06.06.2016 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன.அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-அன்னாரின் இறுதி நிகழ்வுகளின் சில நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு இணைப்பதுடன்-அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி!ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!