தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறிதரன் அவர்களின் அன்புத் தந்தையாரும்,லங்காசிறி,தமிழ்வின்,மனிதன் ஆகிய இணையத்தள இயக்குநர்களின் அன்புத் தந்தையாருமாகிய,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பெரியவர் சின்னத்துரை சிவஞானம் அவர்கள் 25.05.2016 அன்று இறைவனடி சேர்ந்தார்.
வரும் 29.05.2016 ஞாயிறு அன்று வட்டக்கச்சியில் நடைபெறவுள்ள அன்னாரின் இறுதி நிகழ்வுகளை,அல்லையூர் இணையத்தில் பார்வையிடலாம்.
மண்டைதீவு அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி மாயவனூரை வசிப்பிடமாகவும், பிரான்ஸில் வசித்தவரும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சிவஞானம் அவர்கள் 25-05-2016 புதன்கிழமை அன்று வட்டக்கச்சியில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நெடுந்தீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற லட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், செந்தில்நாயகி(பிரான்ஸ்), சிறிதரன்(இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்), சிறிகுகன்(சுவிஸ்), காலஞ்சென்ற சிறிபரன், காலஞ்சென்ற சிறிவரதன், நவநிதி(பிரான்ஸ்), சிறிரங்கன்(பிரான்ஸ்), சிவநிதி(இலங்கை), சிறிரூபன்(கனடா), காலஞ்சென்ற சிறிஅன்பன், சிறிவினோதன்(பிரான்ஸ்), கலைநிதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜெயபாபு, சிவஞானகுமாரி, கேதீஸ்வரன், வேலவன், சத்தியசிவம், பத்மலோசனி, அருட்செல்வி, தர்சினி, கோசலாதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும், திருநாவுக்கரசு, அன்னலட்சுமி, காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, இராசலட்சுமி, நித்தியலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும், தங்கம்மா(ஓய்வுநிலை அதிபர் வட்டக்கச்சி தெற்கு வித்தியாலயம். – லண்டன்), காலஞசென்றவர்களான பேரம்பலம், பசுபதி, கனகமலர், மற்றும் பொன்னுத்துரை, தர்மலிங்கம், லோகநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று வட்டக்கச்சி மயானத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||||||||||||||||
|