அல்லையூர் இணையத்தின் அனுசரணையில்  (18.05.2016)அன்று நடைபெற்ற-இரு அறப்பணி நிகழ்வுகள்-விபரங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் (18.05.2016)அன்று நடைபெற்ற-இரு அறப்பணி நிகழ்வுகள்-விபரங்கள் இணைப்பு!

1

அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்திற்கும்-மேலும் கிளிநொச்சி உருத்திரபுரத்தில் அமைந்துள்ள திருக்குடும்ப மகளிர் சிறுவர் இல்லத்திற்கும் புதன்கிழமை அன்று  சிறப்புணவு வழங்கப்பட்டன.

நிகழ்வு-01

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த,அமரர்கள் திரு,திருமதி சிவானந்தம்-கமலாம்பிகை தம்பதிகளின் 32வது நினைவு தினத்தினை முன்னிட்டு-பரிஸில் வசிக்கும்-அன்னார்களது  மருமகன் திரு ரவி அவர்களின் நிதி அனுசரணையில்-மகாதேவா மாணவர்களுக்கு 18.05.2016 புதன்கிழமை அன்று மூன்று நேர சிறப்புணவு  வழங்கப்பட்டது.இதற்கான மொத்தச் செலவு 76.000 ஆயிரம் ரூபாக்களாகும். கருணை உள்ளம் கொண்ட-திரு-திருமதி ரவி அவர்களுக்கு-எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நிகழ்வு-02

கிளிநொச்சி உருத்திரபுரத்தில் அமைந்துள்ள திருக்குடும்ப மகளிர் சிறுவர் இல்லத்திற்கும்-18.05.2016 புதன்கிழமை அன்று சிறப்புணவு வழங்கப்பட்டதுடன்-மேலும் மாணவர்களின் வேண்டுகோளின் பேரில் 03 மின்விசிறிகளும் வழங்கி வைக்கப்பட்டன.இதற்கான நிதி அனுசரணையினை- 20.000 ஆயிரம் ரூபாக்களை அல்லையூர் இணையத்தின் இயக்குநர் நேரடியாக வழங்கியிருந்தார்.

நிகழ்வு -03

அல்லையூர் இணையத்தின் நேரடி அனுசரணையில் -வவுனியாவில் அமைந்துள்ள வலுவிழந்தோர் இல்லத்திற்கு சிறப்புணவு வழங்குவதற்கு 20.000 ஆயிரம் ரூபாக்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்த போதிலும்-தவிர்க்க முடியாத காரணத்தினால் 23.05.2016 அன்று வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மே 18….

ஈழத்தமிழர்களின் துயர்தோய்ந்த நாளான மே 18 அன்று-எமது இணையத்தின் ஏற்பாட்டில் ஆதரவற்ற மாணவர்களுக்கு உணவு வழங்கியதையிட்டு சிறு மகிழ்வு கொண்டாலும்-நீங்கள் தொடர்ந்தும் எமது அறப்பணிக்கு கருணை உள்ளத்தோடு உதவிட முன் வரவேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்கின்றோம்.

10 (24) 0.o 0.1 1 (1) 6 (13) 6 (3) 6 (14) 6 (15) f (6) f (10) IMG_0111 copy (1) IMG_0105 copy f (12) f (11) 10 (9) IMG_0124 copy f (3) IMG_0094 copy IMG_0095 copy IMG_0091 copy IMG_0099 copy IMG_0096 copy

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux