அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த,திருமதி சதாசிவம் அன்னலட்சுமி அவர்கள் 16.05.2016 திங்கட்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17.05.2016 செவ்வாய்கிழமை அன்று -அன்னாரது இல்லத்தில் ஈமைக்கிரியை,நடைபெற்ற-பின்னர் உடல் அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
அன்னாரது கணவர் திரு சதாசிவம்( சிவம்) அவர்கள்-அல்லைப்பிட்டி-மண்கும்பான் மக்களால் நன்று அறியப்பட்டவர் என்றும்-அமரர் திருமதி சதாசிவம் அன்னலட்சுமி அவர்களே -அல்லைப்பிட்டியில் அதிக குழந்தைகளைப்(16)பெற்ற-தாய் என்றும் தெரிய வருகின்றது.
அன்னாரது இறுதி நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
இவ்வறிவித்தலை,உற்றார்,உறவினர்,நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்-நிழற்படங்கள்-அல்லையூர் இணையம்