யாழ் தீவகம் எழுவைதீவு கிராமத்திற்கு,காற்றாடி மூலம் மின்சாரம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் எழுவைதீவு கிராமத்திற்கு,காற்றாடி மூலம் மின்சாரம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

12977220_516459281866835_6585191064184962567_o

யாழ் தீவகத்தில் அமைந்துள்ள,தரைத் தொடர்பற்ற நான்கு கிராமங்களில் ஒன்றான எழுவைத்தீவுக் கிராமத்து மக்களின் முழுமையான மின்சாரத் தேவையினை நிவர்த்தி செய்யும் நோக்கோடு-இலங்கை மின்சார சபையினால்,காற்றாடிகளின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு-தற்போது நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எழுவைதீவு கடற்கரைப் பகுதியில் ஆறு பாரிய காற்றாடிகள் பொருத்தப்பட்டு-அவற்றின் மூலம் பெறப்படும் மின்சாரம் சேமிக்கப்பட்டு-மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.

காற்றாலை (ஆறு காற்றாடிகள்) ,சூரிய சக்தி,டீசல் மின்புறப்பாக்கி ( ஜெனறேற்றர் ) மற்றும் மின்கலம் (Battery) மொத்தம் 60kw.
1. சூரிய சக்தி 40kw.
2. காற்றாலை 6×3.5 மொத்தம் 21kw.
3. டீசல் மின்புறப்பாக்கி ( ஜெனரேட்டர் ) 30kw.
4. மின்கல சேமிப்புக் கொள்ளளவு 110kwh.
இத்திட்டத்துக்கு சுமார் அண்ணளவாக மொத்தச் செலவு நூறு மில்லியன் ரூபா வரை செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படங்கள்-தகவல்கள்…..மணி ஒலி எழுவைதீவு….

12963702_516459308533499_8024106473762003820_n 12967432_519221728257257_2687586443552617141_o 12983190_516459111866852_6881511586633439416_o 12916877_516459161866847_1541354780541324958_o 12973372_516458995200197_7171805248820516274_o 12977154_516458971866866_1961705519549946503_o 13007302_519221684923928_4541803570657928612_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux