யாழ் தீவகத்தில்,அனைத்துப் பயிர்களும்,பயிரிடக்கூடிய சிறந்த மண் வளம் கொண்ட பகுதியாக-அல்லைப்பிட்டி இருப்பதனை கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோப் பதிவிலிருந்து – நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
யாழ் தீவகத்தில் அமைந்துள்ள,மண்கும்பான்,அல்லைப்பிட்டி ஆகிய இரு கிராமங்களில் மட்டுமே நல்ல தண்ணீரும்,சிறந்த மணல் வளமும்-நிறைந்து காணப்படுவதாக,புவியியல் ஆய்வாளர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர்.
தற்போது இங்கிருந்து தீவகத்தின் ஏனைய கிராமங்களுக்கு குடிதண்ணீரும்,மணலும் எடுத்துச் செல்லப்படுகின்றன. அனைத்துப் பயிர்களும் விளையக்கூடிய சிறந்த மண்வளம் கொண்ட பூமியாக- மண்கும்பானும்,அல்லைப்பிட்டியும்,காணப்படுகின்ற போதிலும்-தற்போது விவசாயம் செய்கின்ற,விவசாயிகளின் தொகை மிகக் குறைவாகவேயுள்ளதாக தெரிய வருகின்றது.
அல்லைப்பிட்டிப்பகுதியில் மிகக்குறைந்த விவசாயிகளே விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் அல்லைப்பிட்டியில், அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட-ஒரு விவசாயியுடனான நேர்காணலை கீழே இணைத்துள்ளோம்.அவர் சொல்வதனை கேட்டுப்பாருங்கள்.
இவருடைய பெயர் திரு விஜயமோகன்-அமரர் கணபதிப்பிள்ளை அவர்களின் மருமகன்-திருமதி நித்தியலட்சுமி அவர்களின் கணவர் என்பதனை மேலதிக தகவலாக அறியத்தருகின்றோம்.