இந்த உலகில் இரண்டு  கால்களும்,கைகளும் இல்லாமல்-ஒருவர் தனியாக,மகிழ்ச்சியாக  வாழ முடியுமா?இதை படித்துப் பாருங்கள்!

இந்த உலகில் இரண்டு கால்களும்,கைகளும் இல்லாமல்-ஒருவர் தனியாக,மகிழ்ச்சியாக வாழ முடியுமா?இதை படித்துப் பாருங்கள்!

கை கால்கள் இல்லாவிட்டாலும் துணிச்சலுடன் வாழலாம், சாதனை படைக்கலாம் என்பதற்கு உதாரணமாக அண்மையில் ஜேர்மன் நாட்டு பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி ஒன்று அமைந்திருந்தது.

germany-2

இது எமது நாட்டவர்களை இலங்கை அரசை புலம்பெயர் தமிழர்களை கண்திறக்க வைக்க வேண்டிய செய்தியாகும்.

இரண்டு கைகளும் இரண்டு கால்களும் இன்றி ஒருவரால் வாழ முடியுமா என கேட்கலாம். பிறப்பிலேயே இத்தகைய நிலையில் இருப்பதை விட இலங்கையில் நடந்த யுத்தத்தில் கைகால்களை இழந்து எந்த ஆதரவும் இன்றி தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் அச்செய்தி அமைந்திருந்தது.

germany-1

ஒவ்வொரு மனிதனும் இப்பூமிப்பந்தில் அவதரிக்கும்போது அவன் என்றோ ஒருநாள் இறந்துவிடுவான் என்பது எவ்வளவு உண்மையான விடையமாகும். இப்படிப்பட்ட மனிதன் தன் வாழ்நாளில் எவ்வளவுகாலம் வாழ்ந்தவன் என்று கணக்குப் பார்ப்பதைவிடுத்து அவன் எப்படி வாழ்ந்தான் என்ன செய்தான் என்ன சாதித்தான் என்னத்தை விட்டுச்செல்கிறான் என்பதே முக்கியமான விடையமாகும்.

மனிதர்களில் ஒரு சிலர் பிறக்கும்போதே சில குறைபாடுகளுடன் பிறந்துவிடுவது ஆண்டவன் படைப்பு என்று நாம் கூறுவோம். நம்மவர்களால் சொல்லப்படும் கூன், குருடு, செவிடு எனச்சொல்லி ஒருவர் பிறந்துவிட்டால் நமது நாட்டைப் போன்ற வறிய நாடுகளில் அந்த உயிர் பிரியும்வரை அந்தக் குறைபாட்டுடன் பிறந்தவர் வாழ்வு அதோ கெதிதான். நம் சமூகத்தில் இப்படிப்பட்டவர்களை ஒதுக்கி வைப்பது, தள்ளி வைப்பது அவர்களை வாழவிடாமல் உயிருடன் சாகடிப்பது போன்ற சம்பவங்கள் நிறையவே நடக்கும். இவர்களுக்கு பட்டங்கள் சூட்டி இவர்களின் எதிர்கால வாழ்வை நாசமாக்கும் செயல்களிலேயே நம்மவர்கள் பலர் ஈடுபடுவார்கள். இது நம் சமூகத்தால் பழக்கப்பட்ட விடையமாகவும் போய்விட்டது.germany 3

ஆனால் வளர்ந்த , வசதிபடைத்த நாடுகளில் இப்படிப்பட்டவர்களை ஒருபோதும் ஒதுக்கமாட்டார்கள். தரக்குறைவாக நடாத்தமாட்டார்கள். அவர்களுக்கென விசேட கவனிப்புக்கள் ஏற்பாடுகள், பாதுகாப்பு, என வாழ்வியல் அம்சங்கள் சிறப்பாக இருக்கும். அவர்களின் பாதுகாப்பான வாழ்விற்கு அந்த நாட்டுச் சட்டங்களிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மக்களும் மாற்று மனப்பான்மையில்லாமல் எல்வோரும் சரிசமம் என்ற மனப்பக்குவத்தில் வாழ்வார்கள். இதனால் குறைபாடுகளுள்ள பலர் பல துறைகளில் அதீத திறமைசாலிகளாகக் காணப்படுவதுடன் அவர்கள் தாம் வாழும் நாடுகளுக்குப் புகழையும் ஈட்டிக்கொடுக்கிறார்கள்.

இங்கு இப்படங்களில் காணப்படும் ஒரு ஜேர்மனிய இளைஞனைப் பற்றியதாகவே இக்கட்டுரை அமைகின்றது. இவர் பிறப்பிலேயே கை, கால் இல்லாமல்தான் பிறந்தவர். இவருக்கு இரு கைகளும் இல்லை, இரு கால்களும் இல்லை. இவரின் பெயர் ஜெனிஸ் மைக்டேவிட் இவருக்கு வயது 24. ஜேர்மனி-போக்கும் நகரில் பிறந்தவர். சிறுவயது தொடக்கம் ஒழுக்காகக் கல்விபயின்ற இவர் தந்போது தலைநகர் பேர்ளினிலுள்ள பல்களைக்கழகம் ஒன்றில் சமூக விஞ்ஞான பொருளாதாரத்தறையில் பட்டப்படிப்மை மேற்கொண்டுவரும் பட்டதாரி மாணவனாவன்.

இவர் சாதாரண ஒருவரைப்போல் தனது சகல வேலைகளையும் தானே செய்துவருகின்றார். பிறர் உதவிகள் இல்லாமல் எந்த வேலைகளையும் செய்துகொள்ளும் ஆற்றல் வலிமை பெற இந்த நாட்டின் அரசு அவருக்கு வேண்டிய சகல வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறது. இதனால் இப்படிப்பட்ட ஒவ்வொருவரின் வாழ்வும் ஒளிமயமாகத்தான் காணப்படுகின்றது.

இவர் சுயமாகவே தனது அன்றாட வேலைகளைச் செய்துகொள்கிறார். காலைக் கடன்களிலிருந்து மகிழூர்ந்து (கார்) ஓடவும் கற்றுக்கொண்டுள்ளார். இதற்காக விசேட கார் ஒன்றை ஜேர்மனில் உள்ள நிறுவனம் ஒன்று தயாரித்து கொடுத்திருக்கிறது.

பேரூந்து (பஸ்) தொடரூர்ந்து (றெயின்) போன்றவற்றில் தனியாகவே பிரயாணம் செய்கிறார். இவருக்கென உருவாக்கப்பட்ட இயந்திர பிரயாண வண்டிதான் இவருக்கு உற்றதுணையாக விளங்குகின்றது. கடைகளுக்குச் சென்று பொருட்கள் வேண்டவோ உணவுவிடுதிக்கு நண்பர்களோடு சென்று உணவு உண்டு குடித்துப் பேசி மகிழவோ இந்த வண்டிதான் இவருடன் உடனிருக்கிகின்றது.

இவற்றைவிட பொது நூலகத்துக்குச் சென்று படிப்பதற்கு பல்கலைக்கழகம் சென்று விரிவுரைகளை கேட்பதற்கும் இவரால் முடிகின்றது. தற்போதய காலத்திற்கு ஏற்ப கணனியையும் இலகுவாகக் கையாண்டு பிறரைப்போல் மகிழ்வாகவே இருக்கின்றார். இவருக்கென விசேட கணணி ஒன்றையும் ஜேர்மன் அரசு வழங்கியிருக்கிறது.

germanygermany 3இவர் தன் கடமைகளை தானே செய்வதற்கான பயற்சியையும் அதற்கான உதவிகள் அனைத்தையும் ஜேர்மன் அரசும் இங்குள்ள நிறுவனங்களும் வழங்கியிருக்கின்றன.

பொது இடங்களுக்குக் கொண்டாட்டங்களுக்கு, விழாக்குளுக்கும் சென்றுவரும் இவர் கழிவறைகளுக்கும் சென்று தனது தேவைகளையும் சுலபமாகச் செய்துகொள்ளுகின்றார்.

வீட்டில் தான் உண்டு, குடித்த பாத்திரங்களை ஒன்று சேர்த்து பாத்திரங்கள் கழுவும் மெசினில் இட்டு கழுவிச் சுத்தம் செய்வார். இவற்றைவிட மாடிப்படிகளில் ஏறி இறங்குவதற்காக உள்ள உயர்த்தியில்கூட (டுகைவ) பிறர் உதவி இல்லாமல் தானே சுயமாகச் செயற்பட்டு வாழ்கிறார் என்றால். இவர் ஒரு அரிய பிறப்புத்தானே.
ஜேர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் இப்படிப்பட்டவர்களுக்கு எப்படிப்பட்ட உதவிகளைச் செய்து அவர்களையும் வாழவைக்கிறார்கள் என்பதற்கு இந்த இளைஞர் மிகச்சிறந்த உதாரணமாகும்.

அண்மையில் ஜேர்மன் நாட்டு பத்திரிகைகள், மற்றும் தொலைக்காட்சிகள் இவரின் அன்றாட வாழ்வு எப்படி இருக்கிறது, என்பதை சித்தரிக்கும் விவரணம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்கள்.

பத்திரிகையாளர்கள் இவரைக் கண்டு பேட்டி எடுத்தபோது ‘காவலர்கள் உதவியாளர்கள் எவரும் எனக்கில்லை. எனது வேலைகளை நான் செய்கிறேன். பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறேன். விரைவில் சமூகவியல் பட்டதாரியாக உள்ளேன். நான் சந்தோஷமாக வாழ்கிறேன்’ எனச்சிரித்த முகத்தடன் பேட்டியளித்திருக்கிறார். அவரின் முகத்தில் மகிழ்ச்சி, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, ஆர்வம், உறுதி அனைத்தும் வெளிப்படுவதாக பத்திரிகையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஊனமாக பிறந்து விட்டேன் என வீட்டில் சுருண்டு படுத்துவிடாமல் தன்நம்பிக்கையுடன் செயற்பட்ட அந்த இளைஞரின் முயற்சி, அதற்கு பல வழிகளிலும் துணையாக நின்று அவரை தூக்கி விட்ட ஜேர்மனி நாட்டு அரசு, அவரின் பெற்றோர், அவர் வாழும் சமூகம் அனைத்தும் தான் அந்த இளைஞரை இன்று மகிழ்ச்சியாக வாழ வைத்திருக்கிறது.

சுவிட்சர்லாந்து போன்ற வசதி படைத்த ஐரோப்பிய நாடுகளில் ஒருவர் குறைபாட்டுடன் பிறந்து விட்டால் அவரை இந்த சமூகத்தில் ஏனையவர்களைப் போல வாழ வைப்பதற்காக ஏனையவர்களில் தங்கியிருக்காது சுயமாக மகிழ்ச்சியாக வாழ வைப்பதற்காக பெருந்தொகை பணத்தை செலவழித்து உதவி செய்கிறது.
இத்தகையவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக பயிற்றுவிப்பதற்காக இதற்கென்றே பயிற்றுவிக்கப்பட்ட சமூக சேவையாளர்கள், உளவியலாளர்கள் அமர்த்தப்படுகிறார்கள். அவர்களின் நலன்கள் முன்னேற்றங்கள் பற்றிய அறிக்கை மாதாந்தம் பெறப்படுகிறது.

இதனால் இந்த நாடுகளில் ஊனமுற்றவர்கள் என ஒதுக்கி வைக்கப்பட்டு தினம் தினம் சாகடிக்கும் கொடுமை கிடையாது.

இந்த நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் சிலரின் பிள்ளைகள் இப்படி அங்க குறைபாட்டுடன் அல்லது மனநல குறைபாட்டுடன் பிறந்திருக்கிறார்கள். அப்படி பட்ட பிள்ளைகளை விசேட நிலையங்களில் வைத்து பராமரிப்பதற்கு மாதாந்தம் 4ஆயிரம் சுவிஸ் பிறங்குகளை சுவிட்சர்லாந்து அரசாங்கம் வழங்குகிறது. ( இதன் இலங்கை ரூபாவின் பெறுமதி 6 இலட்சம் ஆகும். ) பெற்றோர் தங்களுடன் வைத்து அவர்களை பராமரிப்பதாக இருந்தால் அவர்களுக்கு அப்பணத்தை அரசாங்கம் வழங்குகிறது.

விசேட பாடசாலைகள், நிலையங்கள் மூலம் அவர்களை முழு மனிதனாக வளர்த்தெடுக்கிறார்கள். இதனால் அங்ககுறைபாட்டுடன் பிறந்த யாரும் கண்ணீரும் கம்பலையுமாக வறுமையுடன் காலம் பூராகவும் வாழ வேண்டிய அவசியம் கிடையாது.

germanyஇவற்றைப் பார்க்கும் போது நம் பிறந்த தேசத்தை ஒரு கணம் நோக்கினால் இப்படியான குறைபாடுடன் ஒருவர் பிறந்துவிட்டால் ஏன் அந்தக் குடும்பத்தவர்களாலேயே தள்ளி வைப்பதும் ஒதுக்கி வைப்பதும் சர்வசாதாரணம். சமூகத்தாலும் அரசாங்கத்தாலும் கைவிடப்பட்ட எத்தனை ஆயிரம் பேர் வீதிகளிலும் கோவில்களிலும் கிடந்து பிச்சை எடுத்து வாழ்கிறார்கள். ஆதரவற்ரோராய், வீடில்லாதோராய், உண்டு உறங்க முடியாதோராய், சரியான பராமரிப்பு இல்லாதோராய் ஆக்கப்பட்டு அவர்கள் வாழ்வு குறை வயதிலேயே முடிந்து விடுகின்றது. ஆனால் இவர்களைப் பாவித்து பணம் சம்பாதிக்கும் கொடியோரும் கும்பல்களும் இந்தியா போன்ற பல நாடுகளில் காணப்படுவதும் வேதனைக்குரியவிடையமாகும்.

நமது நாட்டில் கடந்த 30 வருடங்களுக்குமெல் இடம்பெற்ற கொடிய போரின் வடுக்கள் இப்படிப்பட்ட ஊனமானவர்களையும் விட்டுச் சென்றுள்ளது. கால், கை, போன்ற அவையங்களை இழந்தவர்கள், குருடு, செவிடானவர்கள். முடமானவர்கள் எனவும் பிறப்பிலேயே அங்கவீனர்களாகப் பிறந்தவர்களும் எனப் பல லட்சம்பேர் காணப்படுகிறார்கள். இவர்களின் வாழ்வாதாரத்திற்கு அரசு சில உதவிகளைச் செய்து வந்தாலும் அவர்களின் வாழ்வு போராட்டம் நிறைந்ததாகவே இருந்து வருகின்றது.

வடக்கு கிழக்கில் முன்னாள் போராளிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் அவயங்களை இழந்து நடைப்பிணங்களாக வாழ்கின்றனர்.
இப்படிப்பட்டவர்கள்மீது நாம் கருணை காட்டவேண்டும். புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் மனம் வைத்தால் முடியாதவை ஒன்றுமில்லை. போரை நடத்துவதற்காக புலம்பெயர் தமிழர்கள் இலட்சக்கணக்காக அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.

அவர்கள் பணம் கொடுத்து ஊக்குவித்த யுத்தத்தால் அவயங்களை இழந்து பலர் தினம் தினம் அவல வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். வாழ முடியாது தற்கொலை செய்து கொள்கின்றனர்.

அவர்களின் வாழ்வு வளம்பெறவேண்டும். மீள் ஒளி பெறவேண்டும். இவர்களின் ஊனங்களை நாம் பெரிது படுத்தக்கூடாது. அவர்களும் இந்தப் பூமியில் வாழப் பிறந்தவர்கள்தானே. அவர்களுக்கும் ஆசைகள், விருப்புகள், உணர்வுகள், இருக்கின்றன. மாற்றுத் திறனாளிகளான இவர்களிடம் பல திறமைகள், முயற்சிகள், திட்டங்கள், ஆக்கங்கள் நிறையவே காணப்படுகின்றன. அவர்களை நல்வழிகாட்டி வாழவைக்க வேண்டியது அரசினதும் மக்களினதும் கடமையாகும்.

நாம் ‘கண் இருந்தும் குருடர்களாக வாழாமல்’ மனிதப் பண்போடு, மனித நேயத்தோடு இப்படியாக நம் தாயகத்தில் பாதிக்கப்பட்டு வாழ்வுக்குப் போராடிக்கொண்டிருக்கும் உறவுகளுக்குக் கருணை காட்டவேண்டும். புலம்பெயர்ந்த நாடுகளில் அண்மைக்காலமாக பல ஆலயங்கள் கோபுரங்களுடன் வானுயர கட்டப்படுகிறது. அது தவறல்ல, தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் தமது சமய பண்பாட்டு அடையாளங்களை பேணுவதற்கு இது அவசியம் தான்.germany 2

திருமணங்கள், பூப்புனித நீராட்டு விழாக்கள் என சராரியாக ஒவ்வொரு விழாக்களுக்கும் ஆகக்குறைந்தது 50ஆயிரம் ஈரோ அல்லது ஒரு இலட்சம் ஈரோ செலவழிப்பார்கள். சராசரியாக ஒரு பூப்புனித நீராட்டு விழாவுக்கு ஒரு கோடி ரூபா செலவு செய்வார்கள். இதில் 10வீதத்தை அல்லது ஒரு வீதத்தை அங்கவீனமாக அவலப்படும் உறவுகளுக்கு கொடுத்தால் அது பெரும் புண்ணியமாக இருக்கும்.

யுத்தத்தை நடத்திய இலங்கை அரசு, அதற்கு உதவி செய்த நாடுகள், விடுதலைப்புலிகளுக்கு நிதியை வழங்கி மறுதரப்பில் யுத்தத்தை ஊக்குவித்த புலம்பெயர் தமிழர்கள் இவர்கள் அனைவரும் பொறுப்பு கூற வேண்டியவர்கள் தான்.

நன்றி-தினக்கதிர் இணையம்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux