யாழ். மண்டைதீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் திதிக்கிரியை 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் திரு ஏகாம்பரம் மனோகரன் அவர்களின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு-தாயகம் கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சிறுவர் இல்லத்தில் மதிய சிறப்புணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் கிளிநொச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப சிறுவர் மகளிர் இல்லத்திற்கு தளபாடங்களும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்படவுள்ளன.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
மேலதிக விபரங்கள் பின்னர் அல்லையூர் இணையத்தில் பதிவு செய்யப்படும்.