அறப்பணி ஒன்றே முதற்பணியாகக் கொண்டு-இயங்கி வரும் அல்லையூர் இணையத்தின் “ஆயிரம் தடவைகள் அன்னதானம்” என்னும் திட்டத்தின் 119வது தடவையாக-சித்திரை புதுவருட நாளான 14.04.2016 வியாழக்கிழமை அன்று மாணவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டுள்ளது.
பரிஸ் லாச்சப்பல் வர்த்தகப் பெருமகனின் பேராதரவு…
பிரான்ஸின் தலைநகரில் குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படும் லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள மிகப்பிரபலமான வியாபார நிலையம் ஒன்றின் கருணை உள்ளம் கொண்ட உரிமையாளர் ஒருவரின் நிதி அனுசரணையிலேயே-புதுவருட தினத்தன்று மகாதேவா மாணவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வர்த்தகப் பெருமகன் கடந்த ஒரு சில மாதங்களில் மட்டும் மூன்று தடவைகள் அல்லையூர் இணையத்தின் ஊடாக சிறப்புணவு வழங்குவதற்கு நிதி வழங்கியுள்ளார்-என்பதனையும் நன்றியோடு பகிர்ந்து கொள்கின்றோம்.
அல்லையூர் இணையம் தொடர்ந்தும்-தாயகத்தில் ஆதரவற்ற மாணவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்ய ஆவலாக உள்ளது.எனவே உங்கள் மனங்களில் கருணை பூத்து உதவிட முன் வரவேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்கின்றோம்.