வேலணை மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு 20 லட்சத்தில் கம்பிவேலி-விபரங்கள் படங்கள் இணைப்பு!

வேலணை மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு 20 லட்சத்தில் கம்பிவேலி-விபரங்கள் படங்கள் இணைப்பு!

aw (7)

யாழ் தீவகம் வேலணை மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானப் புனரமைப்புப் பணிகள் அதன் பிரான்ஸ் பழைய மாணவர் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் முதற் கட்டமாக 2005 ம் ஆண்டு மைதானத்தின் கிழக்கெல்லையில் இருந்த தனியார் காணிகளில் 24 பரப்பளவிலான காணி அன்றைய அதிபர் திரு. பொ.அருணகிரிநாதன் அவர்களின் முன்மொழிவுக்கமைய சங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டது.  தொடர்ந்து 2014 ம் ஆண்டு மைதானத்தின் தெற்கெல்லையில் 9,5 பரப்பளவிலான காணி கொள்வனவு செய்யப்பட்டு , மைதானம் 400 மீற்றர் ஓடுதளம் கொண்டதாகவும், பிரதானவீதியில் நுழைவாயில்  அமைக்கும் வகையிலும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இக்கல்லூரி  விளையாட்டுப் போட்டிகளின் அவசியத் தேவை கருதி 2002 ம் ஆண்டு, தற்காலிக பார்வையாளர் கொட்டகை ஒன்றும் சங்கத்தினால் அமைக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு  இன்றைய அதிபர் திரு. சி.கிருபாகரன் அவர்களால் முன்வைக்கப்பட்ட  வேண்டுகோளிற்கிணங்க, சுற்று வேலியும் , நுழைவாயிலும் அமைக்கும் திட்டம் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வேலைத் திட்டத்தினை முழுமையாக நிறைவேற்ற அண்ணளவாக ரூபா 20 இலட்சங்கள் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை திருப்திகரமாக நிறைவேற்றுவதில் வேலணை மத்திய கல்லூரியின் பிரான்ஸ் பழைய மாணவர் சங்கத்தினர் முழுமையாக ஈடுபட்டுள்ளனர்.

நிழற்படப்பதிவு-அல்லையூர் இணையம்

தகவல்-வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம்-பிரான்ஸ்

allaiyoor.com (1) allaiyoor.com (2) allaiyoor.com (3) allaiyoor.com (4) allaiyoor.com (5) allaiyoor.com (6) allaiyoor.com (7) allaiyoor.com (8) allaiyoor.com (9) allaiyoor.com (10) allaiyoor.com (11) allaiyoor.com (12) allaiyoor.com (13) allaiyoor.com (14) allaiyoor.com (15) allaiyoor.com (16) allaiyoor.com (17) allaiyoor.com (18) allaiyoor.com (19) allaiyoor.com (20) allaiyoor.com (22) allaiyoor.com (23) allaiyoor.com (25) allaiyoor.com (26) allaiyoor.com (27) allaiyoor.com (30) allaiyoor.com (31) allaiyoor.com (32) allaiyoor.com (33) allaiyoor.com (34) allaiyoor.com (35) allaiyoor.com (36) allaiyoor.com (37) allaiyoor.com (38) allaiyoor.com (39) allaiyoor.com (42) allaiyoor.com (43) allaiyoor.com (44) allaiyoor.com (45) allaiyoor.com (46) allaiyoor.com (47) allaiyoor.com (48) allaiyoor.com (49) allaiyoor.com (50)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux