அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க த.க வித்தியாலயத்திற்கான -புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா கடந்த வாரம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மண்கும்பானைச் சேர்ந்த,நியூ நதியா நகைக்கடை உரிமையாளரினால்-நன்கொடையாக வழங்கப்பட்ட 5 பரப்புக் காணியிலேயே இப்புதிய கட்டிடம் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அதிபர் M.பத்மநாதன் அவர்களின் அயராத கடும் முயற்சிகளின் பலனாக-அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க த.க.வித்தியாலயம் வேகமாக வளர்ச்சியடைந்து வருவது மேலும் குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த வாரம் அதிபர் எம்.பத்மநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற-அடிக்கல் நாட்டும் நிகழ்வில்,தீவகக் கோட்ட கல்வி அதிகாரி-மற்றும் அல்லைப்பிட்டி பங்குத் தந்தை டேவிட் அவர்களுடன்,கலாநிதி பண்டிதர் செல்லையா திருநாவுக்கரசு உட்பட மேலும் பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டிடம் 5 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு விடும் என அதிபர் பத்மநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.