யாழ் தீவகத்தில் அமைந்துள்ள,அனலைதீவு என்னும் கிராமத்தில், விவசாயிகள் பலர் ஆர்வத்தோடு விவசாயத்தில் ஈடுபட்டு விளைபொருட்களை அறுவடை செய்வதனை கீழே இணைக்கப்பட்டுள்ள படங்களில் காணலாம்.
சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள -இந்தச் சின்னஞ்சிறிய தீவிலிருந்து பெருவாரியான மக்கள் புலம் பெயர்ந்து -வெளிநாடுகள் பலவற்றில் வாழ்ந்து வருகின்ற போதிலும்-தாம் பிறந்து வளர்ந்த ஊரை மறவாது-ஊரின் வளர்ச்சிக்கு பெரிதும் முன்னின்று உதவி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அனலைதீவில் வசிக்கும் இளம் விவசாயிகளில் பலர்- கடந்த பல வருடங்களாக,நெற்செய்கை மற்றும் புகையிலை-மிளகாய் என பயிரிட்டு-சிறந்த பலனை அறுவடை செய்து வருவதாக தெரிய வருகின்றது.
இவர்களின் முன்னேற்றத்திற்கு-பக்கபலமாக புலம் பெயர் தேசங்களில் வாழும் சிலர் உதவி வருவதாக-அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.
முயற்சி உடையார்,இகழ்ச்சி அடையார்-என்பது அனலைதீவு விவசாயிகளைப் பொறுத்த மட்டில் உண்மைபோல் தெரிகின்றது.
நிழற்படங்கள்-அனலை குணா