மகாதேவா சிறுவர்களை,மண்கும்பான் பிள்ளையாரின் இராஜகோபுர கும்பாபிஷேகத்திற்கு அழைத்து மகிழ்ந்த திருப்பணிச் செம்மல்-வீடியோ இணைப்பு!

மகாதேவா சிறுவர்களை,மண்கும்பான் பிள்ளையாரின் இராஜகோபுர கும்பாபிஷேகத்திற்கு அழைத்து மகிழ்ந்த திருப்பணிச் செம்மல்-வீடியோ இணைப்பு!

IMG_0551 copy

யாழ் தீவகம் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானுக்கு அமைக்கப்பட்டு வந்த ஏழுதள இராஜகோபுரத் திருப்பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து-கடந்த 23.03.2016 புதன்கிழமை அன்று கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.அன்றைய தினம் கும்பாபிஷேக சிறப்பு மலர் வெளியீடும்-கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.சைவக்குருமார்கள்,சமயப்பெரியோர்கள்,பக்தர்கள் எனப்பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானின் பக்தரும்,ஏழுதள இராஜகோபுரத்தை அமைத்துக் கொடுத்தவருமான-திரு ஏரம்பு .வேலும்மயிலும் அவர்களுக்கு,ஆலய நிர்வாக சபையினால்,திருப்பணிச் செம்மல் என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

திருப்பணிச் செம்மல்,திரு ஏரம்பு .வேலும் மயிலும் அவர்களின் விருப்பத்தின் பேரில்-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-கிளிநொச்சி மகாதேவா இல்லத்துச் சிறுவர்,சிறுமிகள்,பணியாளர்கள் என 110 பேரை,மண்கும்பான் பிள்ளையாரின் இராஜகோபுர கும்பாபிஷேகத்திற்கு அழைத்து -அவர்களை சந்தோசப்படுத்தி மகிழ்ந்தனர்-திரு,திருமதி ஏரம்பு வேலும்மயிலும் தம்பதிகள்…

அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-நடத்தப்பட்ட 115வது அறப்பணி சிறப்பு நிகழ்வாக நாம் பெருமை கொள்கின்றோம்.திருப்பணிச் செம்மல்,திரு ஏரம்பு .வேலும் மயிலும் அவர்களுக்கு-எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

IMG_0682 copy IMG_0684 copy IMG_0690 copy IMG_0552 copy IMG_0554 copy IMG_0559 copy IMG_0564 copy IMG_0566 copy IMG_0568 copy IMG_0570 copy IMG_0572 copy IMG_0573 copy IMG_0582 copy IMG_0585 copy IMG_0591 copy IMG_0593 copy IMG_0596 copy IMG_0598 copy IMG_0599 copy IMG_0600 copy IMG_0602 copy IMG_0603 copy IMG_0604 copy IMG_0606 copy IMG_0610 copy IMG_0629 copy IMG_0630 copy IMG_0631 copy IMG_0632 copy IMG_0633 copy IMG_0638 copy IMG_0639 copy

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux