யாழ் தீவகம் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் துணை கொண்டு-பிரான்ஸில் வசிக்கும்,விநாயகப் பெருமானின் பக்தர் திரு ஏரம்பு வேலும் மயிலும் அவர்களினால் -பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் மேற்பார்வையில் -“சிற்பகசிந்தாமணி”அராலியூர் கனகரத்தினம் கங்கைரூபன் அவர்களினால்,நிர்மானிக்கப்பட்ட-ஏழுதள இராஜகோபுரத்தின் கும்பாபிஷேக விழா 23.03.2016 புதன்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
மிக நேர்த்தியாகப் பதிவு செய்யப்பட்ட-வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் இராஜகோபுர கும்பாபிஷேக விழாவின் முழுமையான வீடியோப்பதிவு மிக விரைவில் இணைக்கப்படும்.
இவ்விழாவில் பெருமளவான பக்தர்கள் மற்றும் சமயப்பெரியோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டதுடன்-மேலும் விழாவிற்கு சிறப்புச் சேர்க்கும் முகமாக-திரு ஏரம்பு வேலும் மயிலும் அவர்களின் மனவிருப்பத்தின் பேரில்-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட-மாணவர்கள் வருகை தந்து கலந்து கொண்டனர்.மேலும் கும்பாபிஷேக விழா மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
அது பற்றிய விபரங்கள்-நிழற்படங்கள் பின்னர் இணைக்கப்படும்.